அம்பேத்கர் என்னும் ஆளுமை 063

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அம்பேத்கர் என்னும் ஆளுமை 063

சட்ட மேதை அம்பேத்கர்
சரித்திரத்தின் நாயகர்! 
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையானவர்! 
சாதி பெயரால் தன்னை தாழ்த்திய  சமுதாயம் வாழ்த்திடவும், போற்றிடவும் வாழ்ந்த மாமனிதர்! 
சாதித்த சாதனைகள் பல! 
எதிர்கொண்ட வேதனைகள் பல ! 
அன்றும் இன்றும் அவர் இட்ட வட்டத்திற்குள்ளே சட்டங்கள்! 
'கற்பி' , 'ஒன்று சேர்', 'புரட்சி செய்' என்று தற்பெருமை இல்லாது வாழ்ந்த இத்தலைவரைப் போல் வேறு யாரையும் காண இயலுமா? 
தீண்டாமை வேரறுத்தார், 
சட்டங்கள் வரையறுத்தார்!! 
ஏழை  மக்களின் எழுச்சிக்கு
எழுதுகோலைத் துணைக் கொடுத்தார்! 
தீண்டத்தகாதவன் என தூற்றிய  சமூகம் 
'அரசியலமைப்பின் தந்தை' எனப் போற்றுகிறது!
பரோடா மன்னரால் பட்டங்கள் பயின்ற பல்துறை வித்தகர்! 
புத்த மதம் சேர்ந்த போதகர், 
ஏற்றத்தாழ்வு மறைந்து சமுதாயம் இவரால் கண்டது ஒரு வனப்பு!! 

- ச. மதுமிதா, 
இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு, 
தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-17.