மார்கழி மகத்துவம்...!

மார்கழி கவிதை

மார்கழி மகத்துவம்...!

மாதங்களில் சிறந்தது மார்கழி மார்கழி மாதம் சிறந்த மாதம் ...

அது மாதங்களில் நானே மாறுகிறது என்று கண்ணனை கூறியுள்ளான் 

மார்கழி மாதத்தில் தான் நோன்பிருந்து கண்ணனை தன் மணாலனாக பெற்றார் சூடிக்கொடுத்த சுடர் க்கொடி என்ற பெயர் எடுக்க பெயர் எடுத்தவளும் ஆண்டாள் அது சூடிக்கொடுத்த அந்த மாளிகை இறைவனுக்கு அணிவித்து அழகு பார்த்தவளும் ஆண்டாள் அப்படிப்பட்ட சிறப்பு கூறியதுதான் மார்கழி மாதம் அந்த மார்கழி மாதத்தில் நாம் அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து சாணம் பிடித்து கோலம் இட்டு பூசணிப்பூவை வைத்துவிட்டு அதன் பின்னே பெண்கள் குளித்து முழுகி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மையெழுத்து எழுதவும் மறந்தோம்

மலரிட்டு முடியும் என்று கூந்தலுக்கு மலரிடாமல் கண்ணுக்கு மை இடாமல் மஞ்சள் பூசாமல் வெறும் தலைவழியே தண்ணீர் ஊற்றிக்கொண்டு சென்று கோயிலுக்கு சென்று அந்த பனியில் ஈரத்துணியோடு 

கண்ணனை வணங்கி கண்ணனுக்கு தண்ணீர் எடுத்து ஊற்றி வரும்பொழுது அதில் பெறுகிற இன்பம் இருக்கே அதுதான் பேரின்பம்.
 பாலை சாப்பிட முடியாமல் மோர் சாப்பிடாமல் நெய்யுயும் சாப்பிடாமல் அந்த .
கடும்யாகம் மாதிரியான ஒரு வைராக்கியத்தோடு அவன் கண்ணனை வேண்டி வணங்கி அவன் அருளைப் பெற கூடாரவல்லி என்று ஒன்று வரும் 

அன்று மட்டும்தான் கொண்டாடும் பொழுது அன்று வருகின்ற அந்த பேரின்பம் இருக்கிறதே அதுதான் மார்கழியின் சிறப்பு 

கண்ணதாசனும் கூறியுள்ளார் மாதங்களில் நான் மார்கழி மலர்களிலே நான் மல்லிகை என்று கூறியுள்ளார் அதுபோல மலர்களும் மல்லிகையில் தான் சிறந்தது மாதங்களின் மார்கழி தான் சிறந்தது எல்லாவிதமான சிவனுக்குரிய 


சிவன் ஆருத்ரா தரிசனம் வரும் பொழுது சிவன் பிறந்த திருவாதிரை நட்சத்திரம் வருகிறது. 

அன்று திருவாதிரை களிக்கின்றார்
இறைவனே நடனமாடி ஆனந்த நடனமாடி மக்களை மகிழ்விக்கிறார் அப்படிப்பட்ட சிறப்புகளை கொண்டது தான் மார்கழி மாதம் 


எல்லா விதமான சிறப்புகளும் எல்லாம் மக்களுடைய எல்லாம் மதங்கள் சார்புடைய பண்டிகைகளும் கொண்டாடப்படுவது 


அதனிலும் சிறப்பு இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ வேண்டும் என்று எண்ணினோமானால் 

இறைவனை பூசிப்போம் இறைவன் வழி நடப்போம் இறைவனுக்காகவே வாழ்ந்திடுவோம் 

இறைவனின் அருமையை நமக்கு போற்றிட்ட நாம் அருள் புரிந்த நல்ல வழி பெற்றிடுவோம் என்றும் எப்பொழுதும் 


நமக்கு இறைவன் கண்ணன் வந்து அருள் புரிய ராதையும் கண்ணனுமாக நம்மை ஆட்கொள்ள மார்கழி மாதம் சிறந்த மாதம் அந்த மாதத்தில் 

நாம் பூஜைகளை நடத்துவோம் பூசணி பொருள்களை படைப்போம் பூரண அருள் பெறுவோம்..

-முனைவர்
கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை