உலகை உயர்த்தும் பெண்மை

மகளிர் தினம் கவிதை

உலகை உயர்த்தும் பெண்மை

*உலகை உயர்த்தும் பெண்மை*

வாழ்வின் ஆதாரமானவளே
பெண்ணே
அடுப்படியிலிந்து இன்று ஆகாயம் வரை ஆதாரசுருதியாகி
வாழ்வாதரத்தை
உலகுக்கு உணர்த்திட உருகிடும்
மெழுகானவளே

கல்வியைக் கற்றே கலங்கரை விளக்கானாளே
காவிய மாந்தரை
அடியொற்றி நடந்தாளே
காவியமாகியே
கரை கண்டாளே

உள்ளத்தில் உணரப்பட்ட விசயங்களை
உலகுக்கு உணர்த்த உலைக்
களமானவளே

மறுக்கப்பட்ட
உரிமைகளை
மலை போன்ற வைராக்கியங்
கொண்டே
தளராமல் போராடிப்
பெற்றவளே

உறவுத்தேரை இழுத்து
உள்ளக்கோவிலில்
அன்னையாக அக்காவாக தங்கையாக 
அண்ணியாக
பாட்டியாக அத்தையாக
மனைவியாக
தோழியாக
என்றே ஆதி சக தியாகக்
குடியேறியவளே

உந்தனது தடங்கள. தடயங்களாகட்டும்
தரணியின்
அச்சாணியானவளே
பெண்ணே
நீயே வாழ்வாதரமானவளே
உலகின் உன்னதமே
உயிரோட்டத்தின்
அற்புதமே

ஐம்புலனடக்கி
ஐக்கியமாகி
அயராமல்
உழைத்திட்ட
உற்பத்தித்
தொழிற்சாலை
யாகி
உருவகத்தோடு உவமையானவளே
உலகின் உயர்த்திடும் பெண்மையே

முனைவர்
கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை.