வீர மங்கை வேலு நாச்சியார் 036

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

வீர மங்கை வேலு நாச்சியார் 036

வீரமங்கை வேலு நாச்சியார் கட்டுரை
************************************
சுதந்திரப் போராட்டத்தில் வேலுநாச்சியாரின் பங்கு...

சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றவுடன் யாருக்கும் தமிழ்நாட்டில் உள்ள வீரர்கள் பெயர்கள் நினைவுக்கு வரப்போவதில்லை. தமிழ்நாட்டை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் யார் என்று கேட்டால் தான் அனைவரும் சிந்திக்கவே ஆரம்பிக்கின்றோம். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முதல் தமிழ் வீீரப் பெண் வேலுநாச்சியாரை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

*முன்னுரை 
*பிறப்பு 
*திருமணம்
*வேலுநாச்சியாரின் கொள்கை 
*துணிச்சல்
*வெள்ளையனை விரட்டிய 
வேலுநாச்சியார்.
*முடிவுரை.

முன்னுரை
**************
இந்திய சுதந்திரம் பெறுவதற்கு தலைவர்கள் மட்டும் காரணம் இல்லை.
பல வீர மங்கைகளும் உள்ளனர். அவற்றில் முக்கியமாக குறிப்பிட வேண்டும் என்று சொன்னால் வெள்ளைய கும்பினி அரசை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண்மணி என்று கூறப்படும் வேலு நாச்சியாரை தான். ஒரு பெண் தைரியசாலியாகவும் துணிவுடன் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக உள்ளவர். வேலு நாச்சியாரின் புகழை இக்கட்டுரை வடிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..

பிறப்பு
**********
இராமநாதபுரத்தில் 1730-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 -ஆம் தேதி பிறந்தார் .
தந்தை பெயர் செல்லமுத்து தேவர். தாயாரின் பெயர் சத்தந்தி முத்தாத்தாள் ஆவார்.
இவர் சிறு வயதிலேயே கல்வியிலும் கலையிலும் சிறந்து விளங்கினார் .

வாள்வீச்சு ,அம்பு விடுதல், ஈட்டி எறிதல் குதிரை ஏற்றம்,
யானையேற்றம் போன்ற கலைகளையும் தமிழ்,  ஆங்கிலம் , உருது போன்ற மொழிகளையும் கற்று தேர்ந்தவர்.

திருமணம்
**************
வேலு நாச்சியாரை ஒரு ஆண்மகன் போல தந்தை வளர்த்து வந்தார்.

வேலுநாச்சியாருக்கு 16-ஆம் வயதில் முத்து வடுகநாதருடன் திருமணம் நடந்தது. முத்து வடுகநாதரின் தந்தை சிவகங்கைக்கு ராஜாவாக இருந்தார். முத்து வடுகநாதர் பல கலைகளையும் கற்று 1750 ஆம் ஆண்டு சிவகங்கைக்கு ராஜாவாக ஆனார். வேலுநாச்சியாருக்கு ஒரு மகள் பிறந்தாள். மகளின் பெயர் வெள்ளச்சி.

வேலு நாச்சியாரின் கொள்கை 
****************************************
முத்துவடுகநாதர் உடையத்தேவர் சிவகங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்டாததால் ஆங்கிலேய காலனியர்களோடு நவாப்பின் படையும் இணைந்து காளையார் கோயிலில் தங்கியிருந்த 
முத்துவடுகநாத உடையப்பதேவர் மீது போர் தொடுத்தனர்.
அந்த போரில் முத்து வடுகநாதர் உயிர் பிரிந்தது.

*கணவர் இறந்த செய்தியை கேட்ட வேலுநாச்சியார் தனது மகளை அழைத்துக் கொண்டு பிரதானி தாண்டவராயினும், மருது சகோதரர்களின் உதவியுடன் திண்டுக்கல் அருகில் உள்ள விருப்பாட்சி பாளையத்தில் குடி புகுந்தார்.

* தன் கணவனையும் நாட்டு மக்களையும் கொன்ற நவாப்பை தண்டிக்க வேண்டும் என்று மனதில் ஒரு கொள்கையை புகுத்திக் கொண்டார். அதற்கு தக்க சமயம் வர வேண்டும் என்று காத்திருந்தார்.

 துணிச்சல்
***************
 சிவகங்கையை மீட்க வேண்டுமானால் அவரிடம் போர் வீரர்கள் வேண்டும் என்று எண்ணி மன்னர் ஹைதர் அலியிடம் உதவி கேட்டார். சிவகங்கை மண்ணை மீட்க தன் தலைமையில் ஒரு போர் குழுவையும் நள்ளியம்பலம் தலைமையில் ஒரு போர் குழுவையும், மருது சகோதரர்கள் தலைமையில் ஒரு போர் குழுவையும், அமைத்து
சிவகங்கையை மீட்பதற்கு போர் தொடுக்க தயாரானார். 

*நவாப்பிற்கு உதவியாக இருந்தது ஆங்கிலேய அரசு என்பதே உணர்ந்து முதலில் ஆங்கிலேயரை விரட்டி அடிக்க வேண்டும்
என்று எண்ணினார்.

வெள்ளையனே விரட்டிய வேலுநாச்சியார்
*****************************************
 வேலுநாச்சியார் தன் நாட்டை மீட்பதற்காக தனது படைகளை திரட்டி கொண்டு சிவகங்கை செல்லத் தொடங்கினார். வழியில் செல்லும்போது ஆங்கிலேய படைகள் செய்து வைத்திருந்த தடையை தகர்த்து  சென்றது  வேலுநாச்சியாரின் படைகள்.
*குயிலி* என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கு எரித்து ஆயுதங்களை அழித்தாள்.

வேலுநாச்சியார் மேற்கொண்ட அந்த போரில் ஆங்கிலேயர்கள் புறமுதுகிட்டு ஓடினர். இறுதியாக வேலுநாச்சியார் அவர்கள் சிவகங்கை மிட்டு சிவகங்கை அரசவையில் அரசியாக இருந்து ஆட்சி புரிந்தார். சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது.

முடிவுரை
************
 நல்ல தலைவனுக்கு அழகு கடினமான சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை எடுப்பது .
அது மிகவும் சரியாக செய்தவர் வேலுநாச்சியார் அவர்கள்.
வேலுநாச்சியாரின் விவேகத்துடன் கூடிய வீரமே அவருக்கு வெற்றியை தந்தது. இதுபோல இன்றைய பெண்களும் தைரியத்துடனும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். பெரும் போராட்டங்களை நடத்தி ஆங்கிலேயரை எதிர்த்த முதல் வீரப்பெண்மணி என்ற பட்டத்தை பெற்ற வேலுநாச்சியார் 25-ஆம் தேதி டிசம்பர் மாதம் 1796 ஆம் ஆண்டு இறந்தார்.
மங்கையராய் பிறப்பதற்கே நல் மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற கூற்றுக்கிணங்க வாழ்ந்து மறைந்த வேலுநாச்சியாரை போற்றி மகிழ்வோம். 

நல்வாய்ப்பை நல்கிய மகிழ்ச்சி பண்பலைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கின்றேன்.

- காருண்யம் அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் முனைவர்
செ.ஆயிஷா 
பல்லடம்.