பாரதியார் ...! 070

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பாரதியார் ...! 070

 பாரதியார்


பாரதம் போற்றும் மகாகவியே//

உலகம் போற்றும் கவிதையின் மாமன்னனே//

மனதில் என்றும் அணையா விளக்கே//

வஞ்சமில்லா மனசுக்காரரே//

ரோஜா இதழைப் போல் மென்மையானவரே//

உங்களை நான் மறக்க முடியுமா//

இந்த நாட்டிற்காக பிறந்தவரே//

பெண் அடிமையை எதிர்த்தவரே//

பெண் விடுதலைக்காக வீர குரல் எழுப்பியவரே//

தமிழ்நாட்டு மீது பற்று கொண்டவரே//

தேன்கூட திகட்டும் உங்கள் கவிதைகள் திகட்டாது//

கவிதையின் சிம்ம சொப்பனமே//

நாட்டிற்காக வாழ்நாளை அர்ப்பணித்தவரே//

உங்கள் கவிதைகளை படிக்க படிக்க மனம் ஏங்கும்//

முறுக்கு மீசைக்காரர் என்றால் உங்கள் நினைவுதான்//

பூமியில் கவிதை படைத்தது போதும் என்று வானுலகம் சென்றாயோ//

நீங்கள் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதில் இன்னும் வாழ்கின்றீர்//

உங்கள் கவிதையில் தமிழின் கம்பீரம் தெரியும்//

உங்கள் படைப்புகள்  மனதை வருடி  செல்கிறது//

உங்கள் பாடல் ஒவ்வொன்றும் செவியில் மயக்கம் தரும்//

இந்த உலகில் என்றும் உங்கள் கவிதைகளும் பாடல்களும் மறையாது//

உங்கள் கவிதைகள்  உணர்ச்சிப் பூர்வமானது//


- ஆ. அஜய்,

இளங்கலை முதலாம் ஆண்டு கணினி அறிவியல்
எஸ்.என்.எம்.வி கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்