வலி...! 30

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதைப் போட்டி

வலி...! 30

வலி:

ஞாயிற்று கிழமைகளில் அடுத்து ஒரு வாரத்துக்கு தேவையான தோசை மாவு அரைப்பது  சுசீலாவின் வழக்கம்.அன்றும் மதிய உணவை முடித்து விட்டு மாவு அரைத்து கொண்டு இருந்தாள், அருகில் அவளது மூன்றரை வயது மகன் முகிலன் விளையாடி கொண்டு இருந்தான் பொம்மைகளோடு . பருப்பை களைந்து தண்ணீரை வெளியே ஊற்ற சென்றவள் எதிர் வீட்டு கனகா பேச்சு குடுக்கவே பேசி கொண்டு நின்று விட்டாள். திடீரென முகிலன் அலரும் சத்தம் கேட்டது. கனகாவும், சுஷீலவும் வீட்டுக்குள் வேகமாக சென்று பார்த்த போது கிரைன்டர் மோட்டரில் கை விரல் சிக்கி முகிலன் துடித்து கொண்டு இருந்தான்.அவனை அருகே மருத்துவமனைக்கு அழைத்து சென்று கட்டு போட்டு வீட்டுக்கு வந்து உறங்க வைத்து இருந்தாள் .தூக்கத்திலும் வலியால் முனகியபடி இருந்தான் முகிலன்.அவனை பார்த்து கொண்டே தனது அஜாக்ரதை தனத்தால்  பிள்ளைக்கு ஆனதை எண்ணி அழுது கொண்டு இருந்தாள் . கண் விழித்த அந்த பிஞ்சு தன் அம்மா அழுவதை பார்த்து விட்டு , எனக்கு வலிக்கல அம்மா , மருந்து போட்டா சரி ஆய்டும் என்று அவள் கண்களை துடைத்துக் விட்டான். அதோடு தான் அழுதால் அம்மா தாங்கிக் கொள்ள மாட்டாள் என்று அவள் முன் அழுவதையும் தவிர்த்தான். தாய்க்கு தெரியாதா தன் பிள்ளை மனது!! அவனை மடியில் அனைத்து உச்சி முகர்ந்தாள்.

- M.கற்பகவேணி,

 சுரண்டை