தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்..!!

kavithai

தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்..!!
தந்தையர் தின வாழ்த்துக்கள்

தன் வரவை தன் பிள்ளைகளுக்காய்செலவாக்கி!!

தன் உழைப்பிலே

தன் குடும்பத்தை உயர்வாக்கி!!

தன்னலம் பாராத,

தனக்கென்று சேமிக்காத, தந்தையர்!

தள்ளாடும் வயதில் கூட !தன் உழைப்பை மூலதனமாக்க துடிக்கும்நல்லவர்!

இன்பத்தை உன்னால் கண்டேன்!

துன்பத்தை உன் பிரிவால் கண்டேன்!

குடும்பத்தின் சுமைதாங்கியே!

குடும்பம் செழிக்க

கடல் தாண்டும்பாச பறவையே!

மழலைகளை மார்பிலும்!, தோலிலும்!!சுமந்து!

மனைவியை நெஞ்சில் சுமந்து!!

மருமகனிடம்!, தன் பெண்பிள்ளைகள் இனிதேவாழ!

தன் மானம் இழந்து

தன் வீரம் மறந்து!

தலைகுனிந்து போகும்!! பதுங்கும்புலி!

மாற்றான் தன் மக்களை சீண்டிப்பார்த்தால்

மறுகணம் பாயும் சிங்கம்!

இன்று குடும்ப சிங்கத்திற்கான!

உதிரம் கொடுத்த உயிருக்கான! தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்!!

 

-கவிதை மாணிக்கம்