கவிஞர் சுபாவின் கவிதைகள்

சுபாஷினியின் கவிதைகள்

கவிஞர் சுபாவின் கவிதைகள்

யார் இவள் !!

 

அன்பின்

ஸ்பரிசத்தை

ஏதென்றே

உணராதவள் !!

 

இவள் !!

காதல்

இல்லாமல்

தாய்மையடைந்தவள் !!

 

அழகிருந்தும்

ஒதுக்கி

வைக்கப்பட்டவள் !!

 

அறிவிருந்தும்

அடுப்படியில்

அழுக்காய்

மங்கியவள் !!.

 

கண்ணீர்

துளிகளுக்கு

நடுவே

முகம் தேடுபவள் !!

 

விம்மல்களுக்கு

நடுவே

குரல்

தொலைத்தவள் !!

 

அனுமதிகள்கேட்டு

பரிதாபமாக

ஏங்கி

நிற்பவள் !!.

 

வெறுமையின்

பசிக்கு

உணவானவள் !!

 

வெற்றிடங்களில்

நிரப்ப

நினைவுகற்றவள் !!

 

தூயவள்

அன்பானவள்

ஆசைப்பட

தெரியாதவள் !!

அடம் பிடிக்க

உரிமையற்றவள் !!

 

தனிமைக்கு

மட்டுமே

சொந்தமானவள் !!

 

யார் இவள் !!.

அவன்

அதிகார

கர்வத்திற்க்கு !!

 

பலியாகிய

காதலாய் ...

கொன்று

புதைக்கப்பட்ட

ஏக்கம்

இவள் !!.

 

நவீன

காலத்திலும்

கேட்கப்படாத

கூக்குறளாய் !!.

 

இன்னும்

இருக்கத்தான்

செய்கிறாள் !!.

 

ஒரு காலத்தில்

அடம் பிடித்தே

சாதித்த

அப்பாவின்

செல்ல மகள்

இவள் !!

002.விலை இல்லாத அன்பு.

 

என்னை

ஆசுவாசப்படுத்திக்

கொள்ள.!!

ஏதாவது

ஒரு உயிர்

இருக்கக்கூடாதா.!!

 

இதோ ...

இந்த இடத்தில்

சென்றால் !!

நிம்மதியாக

மூச்சுவிட

முடிகிறது.!!

 

அப்படி

ஒரு இடம்

இருந்திருக்கக்

கூடாதா ??

 

சுடும் வார்த்தைகளால்

மனம் எல்லாம் ரணம் !!என்னிடம்

வந்துவிடு ...

யாராவது அழைக்க

மாட்டார்களா ??

 

எனக்காக

யாராவது

இருக்கக்

கூடாதா ??

 

பிழையுள்ள

இடத்தில்

புகுத்தி !!.

என்னை

பிழையாகவே

உருவகப்படுத்தி !!.

 

நான் சரி

என்று

என் மனம்

கதறும் கதறல் !!.

எந்த செவிகளுக்காவது

கேட்கக் கூடாதா !!

 

அப்படி என்ன

செய்து விட்டேன் !!.

முழுமையாக

நம்பியதை தவிர !!.

 

ஒரு கூட்டுக்குள்

வாழ விரும்பி !!.

அந்த கூடே

என்னை

இறுக்கிக் கொள்வது

முறையோ !!.

 

மனம் விட்டு பேச !!

வயிறு வலிக்க சிரிக்க !!

நீ மட்டும் போதும் ...

என்ற

ஒற்றை சொல்லில்

என்னை

கடத்திச்செல்ல !!

யாராவது ஒருவர்..

இந்த உலகத்தில்

இருந்தால்தான்

என்ன !!.

 

மனம் அனாதையானது !!

அறிவு இன்னும்

முயற்சி செய்து கொண்டிருக்கின்றது !!

 

தேற்றி விடலாம்

என்ற

நம்பிக்கையில் !!.

 

என்னதான்

பலமானவர்களாய்

இருந்தாலும் !!

 

கைகளை

இறுக்கப்பற்றி

உயர்த்தி காட்ட..

ஒருவர்

தேவைதான்

படுகிறார்கள் !!

 

எவ்வளவு உயரத்தில்

பறந்தாலும் !!.

தனக்கான

கூடு இருக்கின்றது !!

அதில் தனக்காக

ஒரு உயிர்

காத்துக்

கொண்டிருக்கின்றது !!.

 

என்கின்ற

ஆறுதலே ...

அப்பறவையை

ஆசுவாசப்படுத்துகிறது !!.

 

நம்மை

தேடும் உறவுகள்

கிடைப்பது அரிது !!

 

அவை

எளிதில்

அமைந்துவிடுவதில்லை

பலருக்கு !!.

 

இவர்கள்

யாரிடம் போய்

நிற்பார்கள் !!.

வேறு

வழியில்லையே !!

 

நம்பிக்கை

பிடித்து தொங்கியவள் !!.

இன்று

ஏமாற்றத்தை

தாங்க

பயிற்சி

எடுத்துக்

கொண்டிருக்கின்றாள் !!.

 

கண்கள்

தேடி

கலைத்த பிறகு !!

வாழ்க்கை

சலித்து விடுகின்றது !!.

 

ஏதோ

ஒன்றை தேடி !!

எதுவுமே

கிடைக்காது போல் !!.

ஏதோ ஒன்றை

யோசித்தபடி !!

செயலற்று போனது

மனம் !!

 

கவிஞர் சுபாஷினி சரவணன் ...

கோயம்பத்தூர்