கவிஞர் முனைவர் ந.மணிமேகலையின் படைப்புகள்
கவிதைகள்
001.முதல் துளிப்பா
"சாதி எங்கேடா செல்கிறது....
பெண்களின் மானத்தில் உறுதியாகிறது,
மேலோங்குகிறது
ஆண் சாதி"
"சமுதாயத்திற்கு பார்வையற்றவன்
பார்வையற்றவனுக்கு சமூகம்
யாருக்கு நீ?
நீ யார்?"
"தொட்டுக் கொண்டால் பற்றிக்கொள்ளும்
வீதியின் படியில்
விதியின் பிடியில்
அன்பின் ஏமாற்றம்"
002.துளிப்பா
பயணப்படுபவனுக்கு மரணம் தூரம்!
விசனப்படுபவனுக்கு
மகிழ்வும் பாரம்!!
நம்பிக்கை ஒரு சிறுகதிர்!
இருட்டிலே சூரியன்!!
வழிகல்லை அகற்றாதவனுக்கு வழி கிடைக்காது!
மொழிசொல்லை அறியாதவனுக்கு மொழியும் தெரியாது !!
எழு என்னும் சத்தம்!
வெற்றியின் முத்தம் வானத்தில்!!
விளையாத தூய நிலமும் மலடுதான்!
களையாடும் விளைந்த பயிரும் சருகுதான்!!
அன்பு காற்றாக இருந்தால்!
உலகமே பூங்காற்று!!
003.துளிப்பா
"கைபேசியில் உலகம் கிடைத்தாலும்,
இதயத்தில் உறவுகள் தூரமாகிவிட்டன."
மின்னணு உரையாடல் வளர்ந்துவிட்டது –
மன உறவுகள் முடங்கிவிட்டது?"
"பணமின்றி பகை தோன்றும் காலம் இது –
நம் முகம்கூட மதிப்புக்கு காசு கேட்டது."
"நீ எண்ணிய நிமிடம் – மாற்றத்தை விதைக்கும் வினாடி"!
"நம்பிக்கை கொண்டு நடந்தால், அடியெலாம் சாதனை!"
"உண்மையாய் வாழும் உள்ளம் – காலத்தைக் கூட கைகொடுக்கும்!"
"உண்மை பேசும் இதயம் – வெற்றி பேசும் நாளை!"
"நீ சிந்திக்கும் ஒவ்வொரு வார்த்தையும் – நாளைய விளைச்சலாகும்!"
"பழிக்கு பதில் பொறுமை கொடு – பாராட்டு பின்தொடரும்!"

Comments (0)