உலக கவிதை தினம்
கவிதை தினம்
மார்ச் 21, உலக கவிதை தினம்
கவிதை மொழி
உணர்வுகளின் தேடல்
வெளிப்படுத்தும் செயலி
உணர்ச்சிக் குவியல்
கலவைகளின் பேராழி
அந்திச்சாயும் பொழுதில்
அர்த்தமற்ற சிந்தனைகள்
வரிகளாக வடிக்கப்பட்ட
எதார்த்த பதங்கள்
சிரிக்கும் மழலை
விரிக்கும் குடை
தெரிக்கும் மழைத்துளி
வியக்கும் வானம்
சிற்பங்களாக செதுக்கப்பட்ட
அற்பமில்லா சிலைகள்
சீர்ப்பட்டது எழுதுகோல்
எனும் உளிப்பட்டு
கன்னியின் கடைக்கண்
பார்வையில் காதலெனும்
தேர்உலாவில் தேர்வுக்காக
காத்திருக்கும் காகிதங்கள்
எழுத்து உலகத்தின்
நிறைவில்லா நிரூபம்
கற்பனை கதாபாத்திரங்களின்
குறைவில்லா தத்ரூபம்
எண்ண ஓட்டங்களும்
எழுச்சி ஆட்டங்களும்
உன்னத பட்டங்களாக
வரையப்படும் சட்டகங்கள்
தனிமனிதன் சுதந்திர
பேச்சின் தனித்தன்மை
அச்சுகளாக வார்க்கப்படும்
வீச்சுகளில் புனிதத்தன்மை
மானிட வாழ்வின்
மாசிலா சித்திரம்
பேணிட அதுவே
மகத்தான சரித்திரம்
காவியங்களில் கண்டெடுத்த
கரையில்லா முத்துக்கள்
ஓவியங்களாக தீட்டப்பட்ட
தமிழரின் சொத்துக்கள்
பெண்மையின் மென்மையில்
மெல்லிய சாரல்
உண்மையில் கவியில்
உள்ளத்தில் தூரல்
கவிபாடும் மனதிற்குள்
கவினுறு ஓவியம்
செவியினில் நுழைந்திடும்
ஆனந்த காவியம்
ஜெ.பார்வதி
வேலூர்.

Comments (0)