அறிவர் அம்பேத்கர் பிறந்த தின அறிவுச் சுடர் விருது 2025 கட்டுரைப் போட்டி கட்டுரைகள்
அம்பேத்கர் கட்டுரைகள்
001.அம்பேத்கர் – இந்திய ஜனநாயகத்தின் நிலையான குரல்
முன்னுரை
அரசியல் சமத்துவம், உரிமை, சுதந்திரம், சமதர்மம், மற்றும் மக்களின் பங்களிப்பு என்பவையே ஒரு உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்கள். இந்தியாவில் இவை அனைத்தும் ஒரே சட்டப் புத்தகத்தில் இணைந்த ஒளியாகக் கற்றுக் கொடுத்தவர் – டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, சமூக மாற்றத்தில், மனிதநேயக் கோட்பாடுகளில், கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிலும் அவர் நம் நாட்டின் ஆதார தூணாக விளங்கினார். இந்திய ஜனநாயகம் இன்று உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயகமாக திகழ்கிறதே என்றால், அதற்கான மூலக் குரல் அம்பேத்கரின் குரலாகவே அமைகிறது.
1. இந்திய ஜனநாயகத்தின் சிறப்புகள் – ஒரு விரிவான பார்வை
a. உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்
இலட்சக்கணக்கான மக்கள் பல்வேறு மொழி, மதம், கலாசாரம் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் மக்கள் ஆட்சி என்பது மிகப்பெரிய சாதனை. ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை வழங்கும் இந்திய முறை, ஒரு மக்களின் அதிகாரமாக செயல்படுகிறது.
b. அரசியலமைப்பின் உறுதி
அம்பேத்கரின் தலைமையில் உருவான இந்திய அரசியலமைப்பு, உலகிலேயே மிகவும் விரிவானதாகவும், நவீன சமூகத்தின் அனைத்து அடிப்படைகளையும் காக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழிந்தும் அது தளராத தூணாக உள்ளது.
c. மூன்று தூண்கள் – அதிகாரப் பிரிவு
நாடாளுமன்றம் (சட்டமன்றம்), நிர்வாகம் (அரசாங்கம்), நீதித்துறை ஆகியவை ஒன்றையொன்று சமநிலைபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இது அதிகார concentration-ஐ தடுக்கும் மற்றும் சுயாதீன ஒழுங்கை உறுதி செய்கிறது.
d. அடிப்படை உரிமைகள்
தனிநபரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான உரிமைகள் — சிந்தனை சுதந்திரம், சொற்பொழிவு, மதபாரம்பரிய பின்பற்றுதல், கல்வி பெறுதல், சமமாக நடத்தப்படுதல் — அனைத்தும் அரசியலமைப்பில் உறுதியாக கொடுக்கப்பட்டுள்ளன.
e. அடிப்படை கடமைகள்
மட்டும் உரிமைகளே இல்லாமல், குடிமக்களின் கடமைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. நாட்டின் ஒற்றுமை, ஒழுக்கம், மற்றும் பாதுகாப்பு என பல்வேறு அம்சங்களை கட்டமைக்கும் நெறிமுறைகளாக இவை அமைகின்றன.
f. ஒவ்வொரு குடிமகனுக்கும் சம வாய்ப்பு
சாதி, மதம், மொழி, பின்தங்கிய நிலை என எதையும் அடிப்படையாகக் கொண்டு ஒருவரை புறக்கணிக்கக் கூடாது என்பதே இந்திய அரசியலமைப்பின் கருக்கொள்கை. இது சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்கும் வலுவான கண்ணோட்டம்.
2. அம்பேத்கரின் பார்வையில் ஜனநாயகம் – ஒரு ஆழ்ந்த தெளிவு
a. சமூக சமத்துவமே ஜனநாயகத்தின் உள்ளார்ந்த ஆவி
அம்பேத்கர் சுட்டிக் காட்டியது போல, "அரசியல் சமத்துவம் மட்டும் போதாது, சமூக சமத்துவமும் வேண்டும். இல்லையெனில் ஜனநாயகம் வெறும் புலம்புகளாக மாறிவிடும்." என்கிறார். அவருடைய பார்வையில் ஜனநாயகம் என்பது ஒரு ஆட்சி முறை அல்ல, அது ஒரு சமூக மாற்ற இயக்கமாகவே இருந்தது.
b. கல்வியின் வலிமை
அம்பேத்கரின் வாழ்நாளில் "கல்வி அடையுங்கள், ஒன்றுபடுங்கள், போராடுங்கள்" என்ற வாக்கியம், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கோஷமாக மாறியது. கல்வியின்றி உரிமை உணர்வும் இல்லை, வளர்ச்சியும் இல்லை என அவர் வலியுறுத்தினார்.
c. சட்டத்தின் முன் அனைவரும் சமம்
அவருடைய சட்டப் பின்புல அறிவு, ஒவ்வொருவருக்கும் சட்ட ரீதியாக சம உரிமை, பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் விதத்தில் அமைக்கப்பட்டது. இதனால் ஏழையும், வலிமையுள்ளவரும் சட்டத்தின் முன்னிலையில் ஒரே நிலை பெறுகின்றனர்.
3. இன்றைய சூழ்நிலையில் அம்பேத்கரின் எண்ணங்கள் – ஒளிவழி
இன்றைய இந்தியாவில், மதச்சார்பின்மை, சாதிவாதம், பாலியல் பாகுபாடு, பொருளாதாரச் சுழற்சி, கல்வியில் சமத்துவக் குறைபாடு போன்றவை மீண்டும் தலைதூக்க முயல்வதைக் காண்கிறோம். இதை எதிர்த்துப் பேசும் முதல் குரலாக அம்பேத்கரின் சிந்தனைகள் இன்றும் முக்கியத்துவம் பெறுகின்றன.
பாலின சமத்துவம், பொதுமக்கள் சமூக பங்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள், தொழிலாளர் நலன், பின்தங்கிய இனங்களுக்கு இடஒதுக்கீடு, மதச்சார்பின்மை, சுயாதீன நீதித்துறை – இவை அனைத்தும் அம்பேத்கரின் திட்டங்களை இன்று நினைவுகூற செய்கிறோம்.
முடிவுரை
அம்பேத்கர் – ஒரு சாதாரண மனிதன் அல்ல, அவர் ஒரு இயக்கம், ஒரு தலைமுறை கனவு, ஒரு சமூகத்தின் தன்னம்பிக்கை, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை நம்பிக்கை. இந்திய ஜனநாயகம் என்பது வெறும் அரசியல் அமைப்பு அல்ல, அது சமூக ஒற்றுமையின், சிந்தனையின், அறத்தின் ஒளிக்கோணம். அந்த ஒளியின் தோற்றம் அம்பேத்கரின் எண்ணங்களிலேயே கிடக்கிறது.
இன்றைய இளைஞர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் — யாராக இருந்தாலும் — தங்கள் செயல்களில் சமூகநீதி, சமத்துவம், பொறுப்புணர்வு போன்றவை இருக்க வேண்டுமென்றால், அம்பேத்கரின் பாதையை நினைத்துப் பார்ப்பதே வழிகாட்டியாக அமையும்.
நிலையான குரல்
நிழலின் நடுவே ஒளியைத் தேடி,
நேரில் நடந்தார் நமக்காய் ஒருவன்.
அறிவின் அம்பு, உரிமைக் குரல்,
அம்பேத்கர் என்ற உண்டியல் கனல்.
ஒவ்வொரு உணர்வும் உரிமை பெற,
ஓங்கும் குரலாய் நாளும் நிற்கிறான்!
******************************************************************************************************************
002.அம்பேத்கர் வாழ்க்கையில் சிறப்பு நிகழ்வுகள்
முன்னுரை
சமூக நீதிக்கான போராட்டத்தின் அடையாளமாக டாக்டர் அம்பேத்கர் திகழ்ந்தார். அவர் இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பி, சிறந்த அறிஞர், சட்ட வல்லுநர், இலட்சியவாதி, விடுதலையாளர் மற்றும் உண்மையான தேசியவாதி. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் துன்பகரமான பிரிவுகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் பல சமூக இயக்கங்களை அவர் வழிநடத்தினார். இந்தக் கட்டுரையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கையின் சிறப்பு நிகழ்வுகள் பற்றி காண்போம்.
கிளர்ச்சி நாயகன்
அம்பேத்கருக்குள் புது கிளர்ச்சியை உண்டாக்கியது அமெரிக்காவின் நியூயார்க் நகரம். காரணம் இங்கே அவர் தாழ்த்தப்பட்டவர் இல்லை, சாலையில் செல்லும் மனிதர்கள் இவன் எந்த சாதி என்று நினைக்க மாட்டார்கள். விலகி நடந்து சக மனிதன் அற்ப பிரானி போன்று நடத்தும் அசிங்கங்கள் இல்லை. இதனாலேயே அவருக்கு மனதிலும் நடையிலும் உற்சாகம் பிறந்தது என்றாலும் தனது தாய்நாட்டில் அதாவது இந்திய மண்ணில் தன்னால் பூரணமாக அனுபவிக்க முடியவில்லையே எனும் ஏக்கம் ஒரு புண்ணாக அவரது நினைவில் வலி ஏற்படுத்திக் கொண்டு இருந்தது.
இந்த குறைகளில் இருந்து தன் தேசத்தையும், மக்களையும் விடுவிப்பதுதான் எதிர்காலத்தில் தான் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் என்பதை அச்சமயத்தில் முழுமையாக உணர்ந்தார் அம்பேத்கர்.
காந்தியும் அம்பேத்கரும்
தீண்டாமை குறித்து ஆவேசமாக பேசும் இவரால் தாழ்த்தப்பட்ட மக்களுடைய வாழ்வில் உண்மையிலேயே வெளிச்சத்தை கொண்டுவர முடியுமா ? என்ற கேள்விகள் அம்பேத்கரின் மனதில் வட்டமிட்டன.
1923 ஏப்ரலில் இந்தியாவுக்கு திரும்பிய பிறகு காந்தியைப் பற்றியும், இந்திய தேசிய காங்கிரசின் நடவடிக்கைகளையும் மேலும் கூர்ந்து கவனிக்கத் துவங்கினார் அம்பேத்கர். பிறகு அவர் தன் எண்ணத்துக்கு துணையாக இருக்கும் (வழக்கறிஞர்) தொழிலை தேர்ந்தெடுத்தார்.
தானே தேடிச் சென்று தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை தீர்க்க உதவிக்கரம் நீட்டினார். பிறகு தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கென்று தனி பள்ளி தங்கும் விடுதி போன்றவற்றை கட்டித்தர புதிய இயக்கம் ஒன்றை 1924 ஜூலையில் துவக்கினார்.
அக்காலத்தில் காந்தி உட்பட பலர் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் மேடைகளில் முழங்கினாலும், அம்பேத்கரின் வீர உரைகளே அனைவரையும் அதிகம் உசுப்பியது.
முஸ்லிம்களின், சீக்கியர்களின் அரசியல் அங்கீகாரத்தை ஏற்றுகொண்ட காந்தி அரசியலில் தாழ்த்தப்படவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை மறுத்தார். காரணம், இந்து மதத்தை பலவீனப்படுத்தும் செயலாம். ஆனால், பூனைகளைவிட நாய்களைவிட கேவலமாக நடத்தும் ஒரு மதத்தை நாங்களும் அங்கீகரித்தால் அது எங்களை நாங்களே அவமதித்து கொள்ளும் செயலாகும். குடிக்க தண்ணீர்கூட அனுமதி மறுக்கப்படும் நிலையில் இந்து மதத்தையும் இந்த நாட்டையும் முறையே எப்படி தன் சொந்த மதமாகவும், நாடாகவும் கருத முடியும் எனக் கேள்வியை தொடுத்தார்.
இதற்கு முன் காந்தியிடம் இப்படி யாரும் நேருக்கு நேர் துணிச்சலுடன் பேசியதில்லை. அம்பேத்கர் பேசிய பேச்சு ஆணி அடித்தாற்போல் உறுதிபட பேசுவது காந்திக்கு ஆச்சர்யமாக இருந்தது. அடுத்த கணமே அறுந்த பாலமாக இருவரும் உரையாடலை பாதியில் நிறுத்திக் கொண்டனர்.
காந்தியிடமே எதிர்த்துத் துணிச்சலாக கேள்வி தொடுத்த சம்பவம் காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை உண்டுபன்னியது. விளைவு அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர் இல்லை என பொய் பிரச்சாரம் செய்யப்பட்டது. பின்பு அந்த சதி வேலை தோல்வியில்தான் முடிந்தது.
அமைதி வழி போராட்டம்
மார்ச் 3 இல் கிட்டதட்ட 8 ஆயிரம் பேர் நாசிக்கில் அம்பேத்கர் தலைமையில் கூடினர். மிகவும் அமைதியான முறையில் நகரின் மையத்தில் இருந்த கலாராம் கோயிலை நோக்கி ஊர்வலமாக நடந்து வந்தனர். ஊர்வலம் கோயிலை நெருங்க நெருங்க நிர்வாகிகளுக்கும் காவல் அதிகாரிகளுக்கும் குலை நடுக்கம் எங்கே பெரும் கலவரம் வெடிக்க போகிறதோ என பதற்றம். ஆனால், அம்பேத்கரின் கட்டளைக்கு இணங்கிய 8 ஆயிரம் மக்களும் அமைதியான முறையில் போராடினர்.
இரவு கடந்தும் கதவுகள் திறக்கவே இல்லை. மறுநாள் மறுநாள் என போராட்டம் நீடித்துக் கொண்டிருக்கையில் ஏப்ரல் 8 ராமர் தேரில் ஊர்வலம் வந்தே ஆக வேண்டும், கோயில்களின் கதவுகள் திறக்கப்பட்டால்தான் ராமர் வெளியில் வந்து தேரில் அமர முடியும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கோயில் நிர்வாகத்தினர் வேறுவழி தெரியாத்தால் அம்பேத்கருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மறுநாள் தாழ்த்தபட்டவர்களும் எங்களுடன் சேர்ந்து தேர் இழுக்கட்டும் என கூறிவிட்டு அறிவித்த பின்னரே தேரை அவசரமாக கோயில் நிர்வாகத்தினரும் பிராமணர்களும் இதர இந்து சாதிகளும் கூட்டு சேர்ந்து இழுத்து சென்றனர்.
முதலாம் வட்ட மேசை மாநாடும் அம்பேத்கருடைய உரையும்
இந்திய வரலாற்றுக்கே திருப்புமுனை நாளாகவும் அமைந்த பொன்நாளாக லண்டனில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. இந்தியர்களின் வாழ்வுரிமைக்காக அரசியல் அமைப்புச் சட்டங்களில் ஓரளவு சீர்திருத்தத்தை மேற்கொள்வது மாநாட்டை நடத்திய பிரிட்டிஷ் ஆட்சியரின் நோக்கம். அப்போது ஒத்துழையாமை இயக்கத்தை கடைபிடித்து வந்ததால் இந்த மாநாட்டுக்கான அழைப்பைப் புறக்கணித்தார் காந்தி. ஆனால் அம்பேத்கர் தனது மக்களுக்கான நியாயமான வாழ்வுரிமைகளும் அரசியல் சமத்துவங்களையும் பெற இது சரியான சந்தர்ப்பம் என அழைப்பை ஏற்று லண்டனுக்கு விரைந்தார்.
மதத்தின் பேரால் அடிமைகளாக்கப்பட்டு அவமான இருட்டில் வாழும் ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் குரல்கள் அவர் மனசுக்குள் ஒருசேர ஒரு சொல்லைக் கூவின. அது – விடுதலை
முதலாம் வட்ட மேசை மாநாடு முடிவுக்கு வந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மண்ணிலேயே அவர்களது ஆட்சி முறையின் கோளாறுகளை கடுமையாக சாடினார். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக இங்கு பேசுகிறேன்.
காலம் காலமாக எம்மக்கள் மதத்தின் பெயரால் அனுபவித்து வரும் துயரங்களில் இருந்து மீட்காமல் உங்கள் அரசு மேலும் அவர்களை இழிவுபடுத்தி வருவதை இனியும் எங்களால் பொருத்து கொள்ள முடியாது.
ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு அந்த நாட்டின் ராணுவ படையில் சேர உரிமை மறிக்கப்படுமானால் அப்படிப்பட்ட ஆட்சியே எங்களுக்கு தேவையில்லை
இனி இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக மக்களே ஆள்கிற புதிய ஆட்சிமுறை வேண்டும் அந்த ஜனநாயக ஆட்சியில் எம் தாழ்த்தப்பட்ட மக்கள் இப்போது வாழ்கிற அடிமை நிலையிலிருந்து விடுபட்டு அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூக நிலையில் ஏனைய உயர் சாதியினரைப் போல பூரண விடுதலை பெற்றவர்களாக வாழ வேண்டும் என உரத்துக் கூறினார்.
அவருடைய துணிச்சலான பேச்சினை கேட்ட உடன் வந்த சிற்றரசர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்த, ஓர் அரசர் பூரிப்பில் அழுதே விட்டார் – அவர்தான் அமெரிக்கா சென்று படிக்க அம்பேத்கருக்கு பண உதவி செய்த பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட்.
வட்ட மேசை மநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரை குறித்து லண்டனில் வெளியான ஆங்கில நாளேடுகள் புகழ்ந்தன. வயது வந்தோர்க்கு வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற அம்பேத்கரின் அதி முக்கியமான கோரிக்கைகள் குறித்து வியந்து எழுதின.
அம்பேத்கரும் தேசியக்கொடியும்
1947 ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அணுகுமுறையில் பல மாறுதல்கள். இறுதியாக இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதென அது முடிவெடுத்தது. பிறகு இந்தியாவை கட்டியமைக்கும் சில முக்கியமான பொறுப்புகளை தீர்மானிக்க பாபு ராஜேந்திர பிரசாத்தை அழைத்தது.
அரசியல் நிர்ணய சபை எனும் ஓர் அமைப்பை அவரது தலைமையில் உருவாக்கும்படி கோரியது. அந்தக் குழுவில் ஒருவராக தவிர்க்கவே முடியாமல் தேர்ந்தெடுக்கப்பட்டார் டாக்டர். அம்பேத்கர். அப்படி அம்பேத்கரை தேர்ந்தெடுத்ததின் முலமாக இந்தியா கண்ட பேறு என்ன தெரியுமா?
இன்று பாரெங்கும் பட்டொளி வீசி பறக்கும் நம் தேசியக் கொடியின் நடுவில் காங்கிரஸின் சின்னமான ராட்டை வேண்டும் என காந்தியும் ஓம் வேண்டும் என சாவர்க்கரும் போட்டியிட அசோகரின் தர்மச் சக்கரம்தான் நாம் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் சரியான சின்னமாக இருக்கும் என்று உறுதியாக நின்று அதை அனைவரும் ஏற்கும் வகையில் தீர்மானத்துக்கும் கொண்டு வந்தவர் டாக்டர். அம்பேத்கர். அதற்கான வாதத்தின் போதுதான் அம்பேத்கரின் அளப்பரிய அறிவின் வீச்சையும் தேசப்பற்றையும் கண்டு காந்தியும், நேருவும் வியந்தனர்.
சுதந்திர இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கக் கூடிய வல்லமைக் கொண்ட ஒரே அறிஞர் இவர்தான் என்பதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர்.
அம்பேத்கரின் சாதனைகள்
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள், 1935 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியை (RBI) அமைப்பதில் அம்பேத்கர் முக்கிய பங்காற்றினார்.
அதன் பிறகு, 1955 ஆம் ஆண்டில், சிறந்த அரசாங்கத்திற்காக மத்தியப் பிரதேசம் மற்றும் பீகாரைப் பிரிப்பதை முன்மொழிந்த முதல் நபராக திகழ்ந்தார்.
முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் இவரே ஆவர்.
அம்பேத்கர் அவர்கள், இந்தியாவின் வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 14 மணி நேரத்திலிருந்து எட்டு மணி நேரமாகக் குறைக்க வலியுறுத்தினார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியலமைப்பின் ‘பிரிவு 370’க்கு எதிராக குரல் கொடுத்தார்.
1916 இல், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பரோடா சமஸ்தானத்தின் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார். இவர் ஒரு தலித் என்பதால், பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டார். தொடர்ச்சியான ஜாதிப் பாகுபாட்டிற்குப் பிறகு, அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்த வேலையை விட்டுவிட்டு, ஒரு தனியார் ஆசிரியர் மற்றும் கணக்காளராகப் பணியாற்றினார்.
அம்பேத்கர் சாதிப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்பதால், சமூகத்தில் தீண்டத்தகாதவர்களின் பரிதாபமான நிலையை உயர்த்துவதில் அவர் பங்கு கொண்டார். தீண்டத்தகாதவர்களின் உரிமைகளுக்காகப் போராடினார்.
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிலும், ‘வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் தொழிலாளர் அமைச்சராகவும் பணியாற்றினார். பணியில் அவர் செய்த அர்ப்பணிப்பு அவரை இந்தியாவின் முதல் சட்ட மந்திரியாக ஆக்கியது. அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் முதல் தலைவராக இருந்தார்.
இந்தியாவின் நிதிக் குழுவையும் நிறுவினார். அவருடைய கொள்கைகளால்தான் நாடு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேறியது. அதற்குபிறகு, அவர் ராஜ்யசபாவிற்கு நியமிக்கப்பட்டார் மற்றும் 1955 இல் இறக்கும் வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார்.
முடிவுரை
வாழும் காலத்தில் சொல்லிய வாக்குகள் அனைத்தையும் நடைமுறைபடுத்தியவர். இவருடைய சட்டங்கள் மற்றும் கொள்கைகள் யாவும் இன்று உள்ள மக்களுக்கு உதாரணமாக திகழ்கிறது.
நாட்டிற்கு பல பணிகளை செய்த அம்பேத்கர் அவர்கள் 1956-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உறங்கி கொண்டிருக்கும் போதே டெல்லியில் அவருடைய உயிரை நீத்தார்.
ஸ்ரீ சக்தி
ஸ்ரீ வில்லிப்புத்தூர்.
**************************************************
003.அம்பேத்கரின் கல்வி பயணம்
முன்னுரை:
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் யார் இவர்? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய ஒரு மாமேதை. இந்தியாவின் சட்ட மாமேதை என்ற இடத்திற்கு வர இவர் பட்ட கஷ்டம் யாராலும் முடியாது. அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தார். படிக்கும்போது வகுப்பறையில் ஒரு மூலையில் அமர்ந்து படித்தவர் எப்படி தன் கல்விப் பயணத்தின் மூலம் உலகத்தில் மூலை முடுக்கெல்லாம் இவர் சிலை உள்ளது என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்...
அம்பேத்கரின் பள்ளிப் பருவம்:
அம்பேத்கரின் இயற்பெயர் பீம்ராவ் ராம்ஜி: என்பதாகும். இவர் படித்த பள்ளியில் தீண்டாமை என்னும் நச்சு விதை விதைக்கப்பட்டு இருந்தது. அதேபோல் ஜாதி வெறியர்களுக்கு நடுவில் சில சமத்துவவாதிகளும், நல்லவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அம்பேத்கரை வகுப்பில் ஒடுக்கப்பட்டு இருந்த நிலையில் அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவரை அரவணைத்தார். பிறகு இவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பீம்ராவ் என்ற பெயரை அம்பேத்கர் என்று மாற்றிக் கொண்டார்.
கல்வித் தொடக்கம்:
அம்பேத்கர் தனது ஆரம்பக் கல்விக்காக, பம்பாய் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் B.A பட்டம் பெற்றார்.
பரோடா மகாராஜாவின் உதவி:
அவர் பம்பாய் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக படித்து 1913 ல் பரோடா மகாராஜா சாயாஜிராவ் கெய்க் வாட், அவருக்கு M.A, PhD படிக்க உதவி தொகை வழங்கினார்.
கொலம்பியா பயணம்:
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் M.A., Ph.D பட்டங்களை பெற்றார்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்:
அம்பேத்கர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் இல் கல்வி பயின்றார்.
பாரிஸ் பல்கலைக்கழகம் :
பாரிஸ் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.
வழக்கறிஞர் :
அம்பேத்கர் தனது கல்வி பயணத்தின் மூலம் வழக்கறிஞராகவும் ஆனார்.
சட்ட மாமேதை :
தனது கல்வி மற்றும் ஆய்வுகளின் மூலம் அம்பேத்கர் ஒரு சட்ட மாமேதையாக உருவெடுத்தார்.
முடிவுரை :
கற்பி ..! ஒன்று சேர் ..! புரட்சி செய் ..!!
டாக்டர். அம்பேத்கர் கூறியது போல ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள்... அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள் என்பதைப் போல் நாம் வாழ வேண்டும் என்று கூறிக் கொண்டு இக்கட்டுரையை முடிக்கின்றேன். நன்றி ..!!! ஜெய் பீம் ..!!!!
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
004.அம்பேத்கர் மற்றும் புத்த மதம்
ஜெய்பீம்..!
அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியதற்கான மூன்று காரணங்கள்
அம்பேத்கரால் புத்த மதம் மிகவும் நவீனமான மற்றும் பகுத்தறிவு மதமாகக் கருதப்பட்டது என்பது அறிஞர்களிடையே மிகவும் பிரபலமான கருத்து.
அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியதற்கான மூன்று காரணங்கள்
அம்பேத்கரால் புத்த மதம் மிகவும் நவீனமான மற்றும் பகுத்தறிவு மதமாகக் கருதப்பட்டது என்பது அறிஞர்களிடையே மிகவும் பிரபலமான கருத்து.
புத்த பூர்ணிமா, புத்த பூர்ணிமா 2020, புத்த பூர்ணிமா என்றால் என்ன, புத்த பூர்ணிமா ஏன் கொண்டாடப்படுகிறது, புத்த பூர்ணிமா ஏன் முக்கியமானது, உத்தம மதம், பி.ஆர். அம்பேத்கர், இந்தியாவில் புத்த மதம், இந்தியாவில் புத்த பூர்ணிமா, அம்பேத்கர் மற்றும் புத்த மதம், அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறுதல்,
இந்திய சமூகத்தில் தலித்துகள் தங்களுக்கென ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க ஒரே வழி மதமாற்றம் மட்டுமே என்று அம்பேத்கர் நம்பினார்.
அக்டோபர் 14, 1956 தலித் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம் என்பது தெளிவாகிறது. இந்த நாளில், பி.ஆர். அம்பேத்கர் தனது 365,000 தலித் சீடர்களுடன் இந்து மதத்திலிருந்து வெளியேற முடிவு செய்து புத்த மதத்தைத் தழுவினார்.
அம்பேத்கரின் புத்த மத மதமாற்றம், நாட்டில் உள்ள தலித்துகள் ஒரு புதிய உத்வேகத்தையும், இதுவரை இந்து மதத்தில் ஆதிக்கம் செலுத்தும் நான்கு மடங்கு வர்ண அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு குரலையும் பெற்ற தருணத்தைக் குறித்தது. அம்பேத்கர் நீண்ட காலமாக இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளால் விரக்தியடைந்திருந்தார், மேலும் மதத்தின் உள்ளார்ந்த பண்புகள், குறிப்பாக சாதி அமைப்பு, ஆங்கிலேயர்களை விட இந்திய சமூகத்தில் சுதந்திரத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகக் கருதினார்.
சாதி அமைப்பின் உள் சீர்திருத்தத்தை முன்னோக்கிச் செல்லும் வழி என்று கருதிய மகாத்மா காந்தியைப் போலல்லாமல், இந்திய சமூகத்தில் தலித்துகள் தங்களுக்கான இடத்தைக் கண்டுபிடிக்க ஒரே வழி மதமாற்றம்தான் என்று அம்பேத்கர் நம்பினார்.
மே 1936 இல், மும்பையில் நடந்த மகர்களின் ஒரு பெரிய கூட்டத்தில் அம்பேத்கர் உரையாற்றினார் , அங்கு மதமாற்றம் குறித்த தனது கருத்துக்களையும், அது விடுதலைக்கான சிறந்த பாதையாக அவர் ஏன் கருதினார் என்பதையும் அறிவித்தார்.
“நான் உங்கள் அனைவருக்கும் மிகவும் குறிப்பாகச் சொல்கிறேன், மதம் மனிதனுக்கானது, மனிதன் மதத்திற்காக அல்ல. மனித சிகிச்சையைப் பெற, உங்களை நீங்களே மதம் மாற்றிக் கொள்ளுங்கள்," என்று அம்பேத்கர் கூறினார். இருப்பினும், அவர் புத்த மதத்திற்கு மாறியது எதிர்பாராதது.
அடுத்த 20 ஆண்டுகளை எந்த மதம் தனது தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானது என்பதைப் பற்றி சிந்திப்பதில் கழித்தார். இஸ்லாம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது என்ற கருத்தை அவர் நிராகரித்தார், ஏனெனில் அவற்றுடன் இணைக்கப்பட்ட அந்நியத்தன்மை காரணமாக. பேராசிரியர் கௌரி விஸ்வநாதன் விளக்கியபடி, அம்பேத்கர் வேறு மதத்திற்கு மாற முடிவு செய்தபோதும் 'இந்தியத்தன்மை'யின் மடிப்புகளை காட்டிக் கொடுக்க விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. இருப்பினும், மதத்தைப் பற்றிய நீண்ட சிந்தனை செயல்முறைக்குப் பிறகு அவர் புத்த மதத்தைத் தேர்ந்தெடுத்தார், உண்மையில் புத்த தர்மத்தின் தனது சொந்த பதிப்பை வெளியிட்டார், அங்கு அவர் மதத்தின் உள்ளார்ந்த ஒட்டுமொத்த பகுத்தறிவுடன் ஒத்துப்போகாததாகக் கருதிய புத்த மதத்தின் அம்சங்களைசில நேரங்களில் அம்பேத்கர் ஜனநாயகத்தை ஒரு மேற்கத்திய உருவாக்கமாகப் பார்த்து அதை அவர் வெளியிலிருந்து கற்று இறக்குமதி செய்தது போலவும் தோன்றுகிறது.
நிச்சயமாக அவர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக பெரும்பாலான ஐரோப்பிய, அமெரிக்க அரசியல் ஜனநாயகத் தத்துவவாதிகளின் கருத்துகளை வாசித்து, வெளியிலிருந்தே பெரும்பாலான விஷயங்களை எடுத்துக்கொண்டுள்ளார். அவர் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் தங்கியிருந்த சமயங்களில், அவருக்கு இயல்பான அறிவுசார் ஈடுபாடு பிறந்தது. இவரது யோசனைகளில் பெரும் பகுதி இவர்களிடமிருந்து வந்ததுதான். மேற்கத்திய நாடுகளிடமிருந்து உண்மையான ஆதரவை இவர் நாடினார். 1931இல் ‘டிப்ரஸ்ட் கிளாசஸ் இன்ஸ்டிட்யூட் சார்பாக விண்ணப்பம்’ என்ற பெயரில் ‘ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களிடம்’ இவர் மனித இனத்தின் ஒரு பகுதியான ‘நலிவடைந்த மனிதகுலத்துக்கு உதவ’40,000 பவுன்ட் ஸ்டர்லிங் திரட்ட முயற்சி செய்தார்.
(அம்பேத்கர் அவ்வப்போது, மனிதத்தன்மை என்று பொருள்படும் மனுஸ்கி என்ற மராத்தி வார்த்தையை அப்படியே ஆங்கிலத்தில் பயன்படுத்துவதுண்டு).
இந்திய நாகரிகத்தில் புத்த மதம் மூலமாகவே இவர் மனிதநேயத்தின் பல்வேறு வகைகளைக் கண்டார்.
ஒருசில வகைகளில் டாக்டர் அம்பேத்கர் சமய ஈடுபாடுடையவராக இருந்தார். ‘மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு மதம் முற்றிலும் அத்தியாவசியமான ஒன்று’ என்று இவர் கருதினார். இந்த வகையில் மார்க்சிஸ்டுகளின் நாத்திகத்திலிருந்து மாறுபட்டிருந்தார். ஆனால், மதம் குறித்த இவரது பார்வை சமூக நலன்களைக் கருத்தில்கொண்டே தீர்மானிக்கப்பட்டது. இந்து மதத்தில் சாதி அமைப்புகள் இரண்டறக் கலந்திருந்ததால் இவர் இந்து மதத்தைப் புறக்கணித்தார். ஆனால், புத்த மதத்தில் உள்ளார்ந்த சமத்துவம் நிலவியது.
புத்த மதம் என்னும் கடல்**
இந்து மதத்திலேயே இருந்தால் யாராலும் எந்த வகையிலும் வளம்பெற முடியாது. இந்து மதத்தில் இருந்துவரும் சாதிப் பாகுபாடுகளால், உயர் சாதியினர் பலன் பெறுகிறார்கள். மற்றவர்களின் கதி என்ன? ஒரு பிராமணப் பெண்மணி குழந்தைப் பெற்ற உடனே காலியாக இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் தன் மகனை அமர்த்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார். ஆனால், ஒரு துப்புரவுப் பணியில் இருக்கும் பெண்ணுக்குக் குழந்தை பிறந்தால், காலியாக இருக்கும் ஒரு துப்புரவுப் பணியாளர் பணியில்தான் அவரது கவனம் செல்கிறது. இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம அமைப்புதான் இப்படிப்பட்ட சமூக விசித்திரமான சமூக வடிவமைப்புக்குப் பொறுப்பு. இதிலிருந்து என்ன முன்னேற்றம் ஏற்படப் போகிறது. புத்த மதம் மூலம்தான் வளம்பெற முடியும்.
புத்த மதத்தில் 75% பிக்குகள் பிராமணர்கள், 25% பேர் சூத்திரர்கள் மற்றும் பிறர். ஆனால், புத்த பகவான், “ஓ, பிக்குகளே… நீங்கள் பல்வேறு நாடுகள் மற்றும் மதங்களிலிருந்து வந்துள்ளீர்கள். நதிகள் அதனதன் பிரதேசங்களில் தனித்தனியாகப் பாய்கின்றன. ஆனால், அவை கடலில் வந்து இணையும்போது, தங்கள் தனி அடையாளங்களை இழந்துவிடுகின்றன. அனைத்தும் ஒன்றாகிவிடுகின்றன. புத்த மத சங்கமும் கடலைப் போன்றதுதான். இந்த சங்கத்தில் அனைவரும் சமம்” என்றார்.
புத்த மதம் குறித்த இந்தப் பார்வை, சமூகத் தாக்கங்களை மட்டுமல்லாமல், அரசியல் தாக்கங்களையும் கொண்டுள்ளது. “புத்தரின் மதம் அனைவருக்கும் சிந்தனை சுதந்திரம், சுய மேம்பாட்டுக்கான சுதந்திரத்தைத் தருகிறது” என்கிறார் அம்பேத்கர். மேலும், “இந்தியாவில் புத்த மதத்தின் எழுச்சி பிரெஞ்சுப் புரட்சிப்போலவே முக்கியத்துவம் வாய்ந்தது” என்று அம்பேத்கர் கூறுகிறார். புத்த மதத்துக்கும் பிரெஞ்ச் புரட்சிக்கும் இடையே ஆழமான தொடர்பைப் பார்க்கிறார். 1945ஆம் ஆண்டு, அக்டோபர் 3ஆம் தேதி அகிய இந்திய வானொலி நிலையத்தில் தனது உரையில் பின்வருமாறு இவர் அறிவித்தார்:
*ஜனநாயக விழுமியங்களின் இந்திய வேர்கள்*
“எனது சமூகத் தத்துவம் மூன்று வார்த்தைகளில் பொதிந்துள்ளன என்று கூறலாம்: சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். எனது இந்தத் தத்துவத்தை நான் பிரெஞ்சு புரட்சியிலிருந்து பெற்றதாக யாரும் சொல்ல வேண்டாம். நான் அப்படிச் செய்யவில்லை. எனது தத்துவத்தின் வேர்கள் அரசியல் அறிவியலில் இல்லை; மதத்தில்தான் உள்ளன. என் ஆசான் புத்தரின் போதனைகளிலிருந்துதான் நான் இவற்றைப் பெற்றேன். இவரது தத்துவத்தில் சுதந்திரம் மற்றும் சமத்துவத்துக்கு இடம் இருந்தது. சுதந்திரமோ அல்லது சமத்துவமோ நிராகரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே அவர் சகோதரத்துவம் அல்லது மனிநேயத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். இதுதான் மதத்தின் மறுபெயர்.”
அந்த வகையில், புத்த மதம் ஒரு ஜனநாயக மதம். அம்பேத்கர் இந்த மதத்தில் தான் கண்டறிந்த சமுதாய மதிப்பீடுகளை அரசியல் ஜனநாயகம் மூலமாக பரவச் செய்ய முயற்சி செய்தார். 1919 மற்றும் 1949-1950 ஆண்டுகளுக்கிடையே இவர் இந்தியச் சமுதாயத்தில் மனித உறவுகளில் அதிக சகோதரத்துவ உணர்வைப் பதியவைக்க முயற்சி செய்தார். சட்டமன்றங்களிலேயே பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினரிடையே உள்ள புதிய ஒற்றுமைக்கு ஆதரவாக விவாதிப்பதன் மூலம் ஒற்றுமைக்கு ஆதரவளிக்கும் இடங்களாக அவற்றை மாற்ற முயன்றார். இவற்றால் பெரிதாகப் பல ஏதும் விளையவில்லை. இந்த அரசியல் அமைப்பு முறைகளின் விளைவுகளால் சகோதரத்துவம் உருவாகவில்லை. எனவே, 1950களின் மத்தியில், கடைசி சாதனமாக ஜனநாயக மதமான புத்த மதத்துக்கு மாறுவது என்று முடிவெடுத்தார்
புத்த தர்மத்தின் மறுகண்டுபிடிப்பு, முக்கியமான அர்த்தங்களைக் கொண்டிருந்தது. புத்தரின் போதனைகள் ஜனநாயகத்தன்மை கொண்டவை என்றால், ஜனநாயகம் என்பது ஒரு மேற்கத்தியக் கண்டுபிடிப்பு அல்ல என்றுதான் சொல்ல வேண்டும். அம்பேத்கர் தனது சிந்தனைகளைப் பல்வேறு ஐரோப்பிய, அமெரிக்க அறிஞர்கள் மற்றும் தலைவர்களிடமிருந்து பெற்றார் எனக் கூறப்படுகிறது. ஆனால், ஜனநாயகம் என்பது புத்த மதத்தின் வாயிலாக, அது இந்திய வரலாற்றில் உருவானதுதான். 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி அமலுக்கு வந்த, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் இறுதி வடிவத்தை 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவையில் தாக்கல் செய்து, இவர் ஆற்றிய வரலாறு புகழ்பெற்ற உரையில், இந்தியா மீண்டும் நாடாளுமன்ற ஜனநாயகமாக ‘மீண்டும்’ மாறுகிறது என்றார். ‘இந்தியா மறுபடியும் அதன் புத்த தர்ம வேர்களுக்குத் திரும்புகிறது’ என்று குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற நடைமுறை
இந்தியாவுக்கு நாடாளுமன்றங்களோ அல்லது நாடாளுமன்ற நடைமுறைகளோ தெரியாது என்றில்லை. புத்த தர்மத்தின் பிக்ஷு சங்கங்கள் போன்றே நம் நாட்டில் நாடாளுமன்றங்கள் இருந்தன. புத்த தர்ம சங்கங்கள் என்பதே நாடாளுமன்றம் போன்ற அவைகள்தாம். அந்தச் சங்கங்களுக்கு இன்றைய நவீன கால நாடாளுமன்ற நடைமுறைகள், சம்பிரதாயங்கள் ஆகியவை தெரிந்திருந்தன. இருக்கை ஏற்பாடுகள், தீர்மானங்கள், கூட்டம் நடைபெறுவதற்குத் தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கை, கொறடா உத்தரவு, வாக்குகளின் எண்ணிக்கை, வாக்குச் சீட்டு மூலம் வாக்களித்தல், கண்டனத் தீர்மானம், முறைப்படுத்துதல் முதலான விதிமுறைகளை அந்தச் சங்கங்கள் கொண்டிருந்தன. சங்கங்களின் கூட்டங்களுக்குப் புத்தர் இந்த நாடாளுமன்ற நடைமுறை விதிமுறைகளைப் பின்பற்றினார். தான் வாழ்ந்த காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த அரசியல் நிர்வாக சபைகளின் விதிமுறைகளைத் தழுவி இவற்றை அவர் உருவாக்கியிருக்க வேண்டும்.
இவ்வாறு பாரம்பர்யத்தைக் கண்டறியும் முனைப்பில் இந்தியாவில் புத்த மதம் ஏற்படுத்திய வரலாற்று ரீதியிலான தாக்கம் குறித்த விளக்கத்தில், ஆழமான அரசியல் சிந்தனைகளில் டாக்டர் அம்பேத்கருக்கு இருந்த ஆர்வம் வெளிப்படுகிறது.
பிரமாண்ட விழா
புத்த மதத்தைத் தழுவுவதற்காக நாகபுரியில் பிரமாண்ட விழா நடைபெற்றதற்கு முந்தைய நாளன்று, 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி, அவர் பத்திரிகையாளர் கூட்டமொன்றில் பங்கேற்றார். தான் தொடங்கியுள்ள ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற தனது புதிய கட்சியின் சட்ட விதிகளை வகுத்திருப்பதாக அப்போது குறிப்பிட்டார். அந்தச் சட்ட விதிகளில், ‘இக்கட்சி அரசின் நாடாளுமன்ற அமைப்பிற்கு ஆதரவாக, பொதுமக்களின் நலனுக்காகவும் தனிநபர்களின் நலன்களுக்காகவும் செயல்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கட்சி நாட்டின் மதச்சார்பற்றத் தன்மைக்காகவும் ஆதரவாக நிற்கும். டாக்டர் அம்பேத்கரின் குடியரசு (Republicanism) சித்தாந்தங்களின் இந்த அம்சங்கள் இவரது தாராளமய மதிப்பீடுகளைப் பிரதிபலிக்கின்றன. இவை, சட்டத்தின் ஆட்சியின் மீது இவரது இருந்த ஆழமான ஈடுபாட்டில் மேலும் வெளிப்படையாகத் தெரிகின்றன.
இங்ஙனம்
எஸ்.சதாசிவம்
இடைநிலை ஆசிரியர்
ஊ.ஒ.தொ.பள்ளி
அருணகிரியூர்
அணைக்கட்டு ஒன்றியம்
வேலூர் மாவட்டம்.
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
005.
அம்பேத்கரின் பெண் உரிமைகள் பற்றிய பார்வை
முன்னுரை:
இன்றைய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் சில நூற்றாண்டுகளாக பின்தங்கிய சமூக நம்பிக்கைகள், பாகுபாடு மற்றும் அடக்குமுறைகள் ஆகியவற்றின் தொடர்ச்சியே ஆகும். இவ்வாறான சூழலில், சமூக நெறிமுறைகளை முற்றிலும் புரட்டிப்போட்டு, சமத்துவத்திற்காக சுருங்காத குரலாகத் திகழ்ந்தவர் டாக்டர் பீ.ஆர். அம்பேத்கர். அவரின் பெண் உரிமைகள் பற்றிய பார்வை, இந்திய சமூக நீதியின் வரலாற்றில் மறக்க முடியாத தடம்...
டாக்டர் பீ.ஆர். அம்பேத்கர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் சட்டத் துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மகானாக விளங்குகிறார். சாதி ஒழிப்பு, சமூக சமத்துவம், மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்காக அவர் எடுத்தெழுந்த போராட்டம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால், அவரின் பெண் உரிமைகள் குறித்த பார்வை என்பது சமுதாயத்தில் அதிகம் பேசப்படாத ஒரு முக்கியமான தளம். அம்பேத்கர், பெண்கள் தங்களுடைய உரிமைகளை அறிந்து, ஆண்களுடன் சமமாக வாழ வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கையுடன் இருந்தவர்.
பெண்கள் மீது சமூக அமைப்பின் தாக்கம்:
அம்பேத்கர், ஹிந்து சமூகம் பெண்களை எப்போதும் இரண்டாம் நிலையாகவே பார்த்துவந்தது எனக் கூறினார். அவர்கள் பொருளாதார, கல்வி மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்காற்றாத நிலையில், சமூகம் அவர்களை அடிமைபோல் நடத்தி வந்தது. இது தவிர, திருமண வயது, கணவன் மரணத்திற்குப் பின் விதவை நிலை, குழந்தை திருமணங்கள், சதீப் பிரதா ஆகியவற்றும் பெண்கள் மீது ஏற்றப்பட்ட கொடூரமான ஒழுங்குகளாக இருந்ததது.
பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு:
அம்பேத்கர் கல்வியை, சமூக முன்னேற்றத்திற்கான மிக முக்கியமான கருவியாகக் கருதினார். குறிப்பாக பெண்கள் கல்வி பெறுவது, அவர்களின் அடிமைத்தன நிலையிலிருந்து விடுபட வழி வகுக்கும் என்பதை அவர் வலியுறுத்தினார். இவர் கல்வியமைப்புகளில் பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கக் கோரினார். அரசாங்க வேலைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, குடும்பச் சட்டங்களில் மாற்றங்கள், பத்திரமான வேலை சூழல் ஆகியவை அவரது நோக்கங்களில் அடங்கும்.
சட்டங்களில் பெண்களுக்கு இடம்:
அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்ததோடு, பெண்களின் உரிமைகளும் அந்த அரசியலமைப்பில் நன்கு இடம் பெறும் வகையில் வழிகாட்டினார். 1951ல் சட்டத் திருத்தமாக கொண்டு வந்த "Hindu Code Bill" என்பது அதற்கேற்ப மிக முக்கியமான முயற்சி. இதில் பெண்கள் சொத்து உரிமை, விவாகரத்து, பின்வாழ்வு, மற்றும் பிள்ளைகள் பராமரிப்பு தொடர்பான உரிமைகளைப் பெற்றனர். இது வழமையான பாரம்பரிய ஹிந்து சட்டங்களுக்கு எதிராக இருந்ததாலும், கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தது.
பெண்கள் விடுதலையின் நோக்கம்:
அம்பேத்கரின் பார்வையில், பெண் விடுதலை என்பது சுயாதீனமாக வாழும், அறிவாற்றலும், கருத்து வெளிப்பாட்டும் கொண்ட ஒரு வாழ்வாக இருக்க வேண்டும். பெண்கள் தங்கள் சொந்த வாழ்வை கட்டுப்படுத்தும் உரிமை பெற்றிருக்க வேண்டும். திருமணம் மட்டும் அவர்களின் வாழ்க்கையின் நோக்கம் இல்லை. பெண்கள் நெறிப்படுத்தும் சிந்தனை கொண்டவர்களாக வளர வேண்டும் என்பது அவர் எடுத்துச் சொன்னார்.
நீதிக்கான அவரது பார்வை:
அம்பேத்கர் கூறியதுபோல், “ஒரு சமூகத்தின் வளர்ச்சி அளவை, அந்த சமூகத்தின் பெண்கள் எப்படி வாழ்கின்றனர் என்பதன் அடிப்படையில் அளக்கலாம்.” இந்த பார்வை, பெண்கள் மீதான பல்வேறு அடக்குமுறைகளை எதிர்த்துப் போராட அவர் எடுத்த வழியைக் காட்டுகிறது. பெண்களுக்கு சட்ட உரிமை, அரசியல் உரிமை, சம உரிமை ஆகியவற்றை வழங்குவதில் அவர் முன்நிற்கிறார்.
முடிவுரை:
டாக்டர் அம்பேத்கர், பெண்கள் உரிமைக்காக போராடிக் கொண்டிருந்த தன்னலமற்ற போராட்டம் இன்றும் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கதிராக பரவியிருக்கிறது. அவர் நிறுவிய சமூக நெறிகள் மற்றும் சட்ட அடிப்படைகள், பெண்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு பல வாயில்களைக் கொடுத்துள்ளன. அவரது பார்வை, பெண்கள் விடுதலையின் அடித்தளக் குரலாக இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவரின் பார்வையை உணர்ந்து, செயல்படுத்துவதே அவருக்கு அளிக்கக்கூடிய உண்மையான மரியாதை.
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
006.அம்பேத்கர் – சமத்துவத்தின் ஒளிவிளக்கு
முன்னுரை:
இந்த உலகத்தில் சில நபர்கள் மட்டும் தங்களால் மட்டுமல்லாது, பிறராலும் வாழும் வாழ்க்கையை மாற்றுகின்றனர். அவர்கள் செயல், சிந்தனை, தீர்மானம் மற்றும் போராட்டம் பலரை தீம்புரிந்து நல்லதிற்குத் திருப்புகிறது. அத்தகைய ஒரு மாபெரும் சிந்தனையாளர் தான் டாக்டர் பிம்ராவ் அம்பேத்கர் அவர்கள். சமூக நீதிக்காகப் போராடியவர், இந்திய அரசியலமைப்பின் தந்தை, கல்விக்காகக் குரல் கொடுத்தவர், எந்நிலையில் இருந்தாலும் எழுந்து நின்று வெற்றியடைந்தவர்.
1. ஆரம்ப கால வாழ்க்கை – பாரபட்சங்களை எதிர்கொண்ட பிள்ளை:
அம்பேத்கர் அவர்கள் 1891-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் மாவா நகரில் பிறந்தவர். அவர் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர். பசிக்கே உணவு இல்லாத நிலை, பள்ளியில் கூட சமத்துவமாக அமர முடியாத நிலை, நீருக்கே அனுமதி இல்லாத நிலை – இவை அனைத்தும் அவருடைய சிறு வயதில் ஏற்பட்டன. ஆனால் அவர் இவையெல்லாம் மனவலிமையுடன் எதிர்கொண்டு, கல்வி என்ற ஒரு ஆயுதத்தை கையில் எடுத்து, தன்னை உருவாக்கிக் கொண்டார்.
2. கல்வி என்பது மட்டுமல்ல, வாழ்க்கை மாற்றும் கருவி:
அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை கல்விக்காகவே செலவிட்டார். அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மற்றும் லண்டனில் கல்வி கற்றவர். சமூகத்தின் கீழடக்கப்பட்ட மக்களுக்கு கல்வி என்பது அவர்களை உயர்த்தும் ஒரே வழி என்பதைக் கூறினார். “அறிவை கற்றுக்கொள், ஒடுக்குதலை எதிர்த்து எழு” என்ற தூய வாக்கியம் அவருடைய வாழ்வின் அடிப்படை.
3. அரசியலமைப்புத் தந்தை – ஒரு வரலாற்று சாதனை:
1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததும், அரசியலமைப்பை தயாரிக்க கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைவரும் அம்பேத்கரைத் தேர்ந்தெடுத்தனர். அவருடைய அறிவு, சட்டத்திறமை, சமத்துவக் கொள்கைகள் காரணமாக இந்திய அரசியலமைப்பில் ஒவ்வொருவருக்கும் உரிமைகள் வழங்கப்பட்டன. சமத்துவம், சுதந்திரம், தர்மம், நியாயம் என்பவை அவரது அரசியலமைப்பின் மூலக்கற்கள்.
4. சமூக மாற்றத்திற்கு தொடக்கமாக இருந்தவர்:
அம்பேத்கர் அவர்கள் சாதி அடிப்படையிலான அவமதிப்புகள், தாழ்த்தப்பட்ட நிலைகள், பெண்களின் உரிமைகள், கல்வியின் பங்கு போன்றவற்றைப் பற்றிப் பேசினார். ‘பகுத்தறிவும், சிந்தனையும், எதிர்ப்பு ஆற்றலும்’ மூலமாகவே மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று வலியுறுத்தினார். “நீங்கள் பிறந்ததை நீங்கள் மாற்ற முடியாது, ஆனால் உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மாற்ற முடியும்” என்ற அவரது வார்த்தைகள், மாணவர்களுக்கு வாழ்வின் வழிகாட்டியாகும்.
5. மாணவர்களுக்கு அறிவுரை – அம்பேத்கரைப் போல உயர்ந்திடு:
மாணவச் செல்வங்கள்! வாழ்க்கையில் பல தடைகள் வரும். ஆனால் அம்பேத்கரைப் போல மன உறுதி, முயற்சி, கல்வி ஆகியவற்றை சக்தியாக மாற்றி முன்னேறுங்கள். அவர் கூறியது போல் – “உங்கள் வாழ்க்கையின் நோக்கம் உங்களை மட்டுமல்ல, மற்றவர்களையும் உயர்த்தும் வகையில் இருக்கட்டும்.” நாம் அனைவரும் கல்வியில் சிறந்து, ஒற்றுமையோடு வாழ்ந்தால் தான் அவரது கனவு நனவாகும் – ஒரே சமம், ஒரே உரிமை, ஒரே மரியாதை!
முடிவுரை:
டாக்டர் அம்பேத்கர் ஒரு நபரல்ல, அவர் ஒரு இயக்கம். ஒரு கனவான சமூகத்தை உருவாக்கி, நமது சுதந்திரத்தை பயனுள்ளதாக்கியவர். அவருடைய வாழ்க்கை ஒரு பாடம். அவரது வார்த்தைகள் ஒரு வழிகாட்டி. அவரது போராட்டம் நமக்கென. எனவே, நாம் அனைவரும் அம்பேத்கரின் பாதையில், கல்வியின் ஒளியில், சமத்துவத்தின் வழியில் நடக்க வேண்டும். அதுவே அவருக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த மரியாதையாகும்!
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
007.அம்பேத்கர் – சமத்துவத்தின் ஒளிவிளக்கு
முன்னுரை:
இந்த உலகத்தில் சில நபர்கள் மட்டும் தங்களால் மட்டுமல்லாது, பிறராலும் வாழும் வாழ்க்கையை மாற்றுகின்றனர். அவர்கள் செயல், சிந்தனை, தீர்மானம் மற்றும் போராட்டம் பலரை தீம்புரிந்து நல்லதிற்குத் திருப்புகிறது. அத்தகைய ஒரு மாபெரும் சிந்தனையாளர் தான் டாக்டர் பிம்ராவ் அம்பேத்கர் அவர்கள். சமூக நீதிக்காகப் போராடியவர், இந்திய அரசியலமைப்பின் தந்தை, கல்விக்காகக் குரல் கொடுத்தவர், எந்நிலையில் இருந்தாலும் எழுந்து நின்று வெற்றியடைந்தவர்.
1. ஆரம்ப கால வாழ்க்கை – பாரபட்சங்களை எதிர்கொண்ட பிள்ளை:
அம்பேத்கர் அவர்கள் 1891-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் மாவா நகரில் பிறந்தவர். அவர் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர். பசிக்கே உணவு இல்லாத நிலை, பள்ளியில் கூட சமத்துவமாக அமர முடியாத நிலை, நீருக்கே அனுமதி இல்லாத நிலை – இவை அனைத்தும் அவருடைய சிறு வயதில் ஏற்பட்டன. ஆனால் அவர் இவையெல்லாம் மனவலிமையுடன் எதிர்கொண்டு, கல்வி என்ற ஒரு ஆயுதத்தை கையில் எடுத்து, தன்னை உருவாக்கிக் கொண்டார்.
2. கல்வி என்பது மட்டுமல்ல, வாழ்க்கை மாற்றும் கருவி:
அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை கல்விக்காகவே செலவிட்டார். அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மற்றும் லண்டனில் கல்வி கற்றவர். சமூகத்தின் கீழடக்கப்பட்ட மக்களுக்கு கல்வி என்பது அவர்களை உயர்த்தும் ஒரே வழி என்பதைக் கூறினார். “அறிவை கற்றுக்கொள், ஒடுக்குதலை எதிர்த்து எழு” என்ற தூய வாக்கியம் அவருடைய வாழ்வின் அடிப்படை.
3. அரசியலமைப்புத் தந்தை – ஒரு வரலாற்று சாதனை:
1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததும், அரசியலமைப்பை தயாரிக்க கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைவரும் அம்பேத்கரைத் தேர்ந்தெடுத்தனர். அவருடைய அறிவு, சட்டத்திறமை, சமத்துவக் கொள்கைகள் காரணமாக இந்திய அரசியலமைப்பில் ஒவ்வொருவருக்கும் உரிமைகள் வழங்கப்பட்டன. சமத்துவம், சுதந்திரம், தர்மம், நியாயம் என்பவை அவரது அரசியலமைப்பின் மூலக்கற்கள்.
4. சமூக மாற்றத்திற்கு தொடக்கமாக இருந்தவர்:
அம்பேத்கர் அவர்கள் சாதி அடிப்படையிலான அவமதிப்புகள், தாழ்த்தப்பட்ட நிலைகள், பெண்களின் உரிமைகள், கல்வியின் பங்கு போன்றவற்றைப் பற்றிப் பேசினார். ‘பகுத்தறிவும், சிந்தனையும், எதிர்ப்பு ஆற்றலும்’ மூலமாகவே மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று வலியுறுத்தினார். “நீங்கள் பிறந்ததை நீங்கள் மாற்ற முடியாது, ஆனால் உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மாற்ற முடியும்” என்ற அவரது வார்த்தைகள், மாணவர்களுக்கு வாழ்வின் வழிகாட்டியாகும்.
5. மாணவர்களுக்கு அறிவுரை – அம்பேத்கரைப் போல உயர்ந்திடு:
மாணவச் செல்வங்கள்! வாழ்க்கையில் பல தடைகள் வரும். ஆனால் அம்பேத்கரைப் போல மன உறுதி, முயற்சி, கல்வி ஆகியவற்றை சக்தியாக மாற்றி முன்னேறுங்கள். அவர் கூறியது போல் – “உங்கள் வாழ்க்கையின் நோக்கம் உங்களை மட்டுமல்ல, மற்றவர்களையும் உயர்த்தும் வகையில் இருக்கட்டும்.” நாம் அனைவரும் கல்வியில் சிறந்து, ஒற்றுமையோடு வாழ்ந்தால் தான் அவரது கனவு நனவாகும் – ஒரே சமம், ஒரே உரிமை, ஒரே மரியாதை!
முடிவுரை:
டாக்டர் அம்பேத்கர் ஒரு நபரல்ல, அவர் ஒரு இயக்கம். ஒரு கனவான சமூகத்தை உருவாக்கி, நமது சுதந்திரத்தை பயனுள்ளதாக்கியவர். அவருடைய வாழ்க்கை ஒரு பாடம். அவரது வார்த்தைகள் ஒரு வழிகாட்டி. அவரது போராட்டம் நமக்கென. எனவே, நாம் அனைவரும் அம்பேத்கரின் பாதையில், கல்வியின் ஒளியில், சமத்துவத்தின் வழியில் நடக்க வேண்டும். அதுவே அவருக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த மரியாதையாகும்!
கவிஞர். நல்லாசிரியர். ஜெ. பூவிழி ,
ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
பசவன் கொட்டாய்,
அணைக்கட்டு ஒன்றியம்,
வேலூர் மாவட்டம்.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
008.

Comments (0)