வேப்பம் பூ

0
167

வேப்பம் பூ

ஏப்ரல் மே மாதங்களில் நம் வீடுகளின் அருகில் இருக்கும் வேப்ப மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும். வேப்ப இலை மட்டுமல்லாது பூவும் வெயில் காலத்தில் உடலுக்குப் பல மடங்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியது.

*சேகரித்தல் – பாதுகாத்தல்:*

குறிப்பிட்ட சமயத்தில்தான் வேப்பம் பூ சீஸன் இருக்கும் என்பதால் ஒவ்வொரு வருடமும் ஏப்ரம், மே மாதங்களில் அடுத்த ஒரு வருடத்திற்குத் தேவையான பூவைச் சேகரித்து வைத்துக்கொள்வது நல்லது. உங்கள் வீட்டின் அருகிலேயே வேப்பம் மரம் இருக்கிறது எனில் பூக்களை நேரடியாக மரத்திலிருந்து பறித்து நிழலில் உலர்த்திக் காய்ந்ததும் ஒரு பாட்டிலில் போட்டுச் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். மரத்திலிருந்து கீழே விழும் பூவைச் சேகரிக்கிறீர்கள் எனில் சுத்தமான தண்ணீரில் கழுவி நிழலில் காயவைத்துச் சேகரிக்கலாம். நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் பூவை மாதம் ஒரு முறை லேசான வெயிலில் காயவைத்து மீண்டும் சுத்தமான பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.

*மருந்தாகும் விதம்*

* வேப்பம் பூ (ஒரு கைப்பிடி) அளவு எடுத்து அவற்றை நீரில் ஊற வைத்து பின்பு அந்த நீரை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.

* வேப்பம் பூ (ஒரு கைப்பிடி) அளவு எடுத்து நன்றாக கொதிக்கின்ற நீரில் போடவும். பின்பு அதிலிருந்து வெளிவரும் ஆவியை காதில் படும் படி பிடித்து வந்தால் காதில் சீல் வடிதல் குணமாகும்.

* வேப்பம் பூ கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்பட்ட புண் விரைவில் குணமாகும்.

* வேப்பம் பூவை எடுத்து வறுத்துப் பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாந்தியும், ஏப்பமும் தரும் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

* வேப்பம் பூவை நன்றாக உலரவைத்து அவற்றை நன்கு அரைத்து சமஅளவு வெடியுப்புடன் கலந்து காற்றுப் புகா பாத்திரத்தில் வைத்து தினந்தோறும். எடுத்துக் கண்களில் தீட்டி வந்தால் கண்கள் பளிச்சென்று தெரியும்.

* வேப்பம் பூ வயிற்றுக்கு தீங்கின்றி குடலிலுள்ள மலக்கிருமிகளை ஒழிக்கும். சிறுவர்களின் வயிற்றைச் சுத்தப்படுத்த வாரத்திற்கு இரு நாட்கள் வேப்பம்பூ கஷாயம வைத்துக் குடிக்க கொடுக்கலாம்.

* வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் குமட்டல், வாந்தி , மயக்கம் குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here