விவேகானந்தர்

0
93

ராம கிருட்டிண பரமஹம்சர், ஒருமுறை நரேந்திரனை (விவேகானந்தர்) அழைத்து, இதுவரை கடும் தியானங்கள் புரிந்து பெற்ற ஆத்ம சக்தியெல்லாம் உனக்கு தந்துவிடலாம் என நினைக்கிறேன் என்றார்.

நரேந்திரனோ, ‘அப்படியா, இந்த சக்தியெல்லாம் பெற்றால், அவை கடவுளை அறிய எனக்கு துணை புரியுமா?’ என்று கேட்டார். பரமஹம்சரோ புன்னகைத்து, ‘அவற்றைக் கொண்டு கடவுளை அறிய இயலாது. ஆனால் நீ ஒரு ஆசானாக மற்றவர்களுக்கு இருக்க அவை துணை புரியும்’ என்றார்.

உடனே நரேன், “ஐயா, அப்படியானால் அவை இப்போது எனக்கு தேவைப்படாது, முதலில் கடவுள் யாரெனக் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறேன். அவ்வாறு கண்டறிந்தபின், இந்த சக்திகளுக்குத் தேவை இருக்குமா எனத் தெரியும். மேலும், இப்போது இவைகளை பெற்றுக்கொண்டாலோ, என் தேடலை மறந்துபோய், என் சுயநலத்திற்காக பயப்படுத்தி விடுவேனோ என்னவோ.” என்று மறுத்து விட்டார்.

ஒருமுறை சுவாமி அகண்டானந்தாவுடன் இமய மலை அடிவாரத்தில் நடந்து கொண்டி ருந்தார் விவேகானந்தர். வெகு தூரம் நடந்த களைப்பு அவரை வாட்டியது. கடும் பசி வேறு! சாலையோரத்தில், இடுகாட்டுக்கு அருகில் விழுந்து விட்டார்!

அந்த இடுகாட்டின் பொறுப்பாளராக இருந்தவர் சுல்பிகர் அலி. இவர், சுவாமிஜி விழுந்ததைக் கண்டு ஓடி வந்தார். தன்னிடம் இருந்த வெள்ளரிப்பழத்தை விவேகானந்த ரிடம் தந்தார்.

”நீங்களே ஊட்டி விடுங் கள்” என்றார் சுவாமி விவேகானந்தர். சுல்பிகர் அலி முதலில் தயங்கினார். பிறகு சுவாமியின் நிலை கருதி வெள்ளரிப்பழத்தை ஊட்டி விட்டார். ஓரளவு தெம்பு வந்ததும், சுவாமிஜி, ”ஊட்டி விடுங்கள் என்றதும் ஏன் தயங்கினீர்கள்?” என்று அவரைப் பார்த்துக் கேட்டார்.

”நீங்கள் ஓர் இந்து சந்நியாசி, நானோ…” என்று இழுத்தார் சுல்பிகர் அலி. உடனே, ”அப்படியெல்லாம் நினைக்காதீர்கள். நாம் அனைவரும் சகோதரர்கள்” என்ற சுவாமிஜி, நன்றி கூறி விடைபெற்றார்!

சில ஆண்டுகள் கழித்து, அமெரிக்கா சென்று திரும்பிய சுவாமி விவேகானந்தருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. ஊர்வலத்தில் வந்த சுவாமிஜி, கூட்டத்தின் நடுவே நின்றிருந்த சுல்பிகர் அலியை அடையாளம் கண்டு கொண்டார். அவரை அருகில் அழைத்து, ”இவர் என் உயிரைக் காப்பாற்றியவர்” என்று அருகில் இருந்தவர்களிடம் கூறி, சுல்பிகர் அலியை பெருமைப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here