புத்தாண்டே வருக புதுமைகள் பல தருக…!
தீதில்லா வளங்கள்
தரணியிலே பெருக…
தீண்டாமை ஓழிந்து
மனிதநேயம் மலர…
நெஞ்சை நிமிர்த்தி
கண்ணியம் காத்திட…
பஞ்சத்தை போக்கி
வறுமையைத் துரத்திட…
பாரெல்லாம் பசுமையெனும் பட்டுக்கம்பளமதை விரித்திட..
பகைமையைத் தவிர்த்து
பாசத்தை விதைத்திட..
ஒற்றுமை உணர்வு
மேலோங்கி நின்றிட…
நல்லதை நாடிட நல்மொழி பேசிட..
அறியாமையெனும்
கள்ளிச்செடியை அடியோடு ஒழித்து…
புதியதொரு பாதையில்
வழிநடத்திச் செல்ல…
கடந்த கால காயங்கள் யாவும்…
கானல் நீராய் ஒருநொடியில் மறைய…
நிகழ்காலத்தில் நடந்தேறும்
நிகழ்வுகள் எல்லாம்…
யாவருக்கும் இடரகற்றி
நன்மையாய் இருக்க…
உறக்கம் கலைந்து
உற்சாகம் கொண்டு…
பேதங்கள் ஏதுமின்றி
பேருவகை உடனே…
வாழ்த்துக் கூறி வணங்கி வரவேற்கிறோம்…
நள்ளிரவு நேரத்தில்
நட்சத்திரக் கூட்டத்தில்…
சொலிக்கின்ற நிலவாக
இம்மண்ணில் ஒளியேற்ற…
புத்தாண்டே வருக
புதுமைகள் பல தருக….!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
மகிழ்ச்சி குழுமத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…!