பங்குனி உத்திர விழா மார்ச் 28.

0
15

 

பங்குனி உத்திர விழா மார்ச் 28.

அந்த வகையில் பங்குனி உத்திர விரதம் இருப்பது எப்படி? விரைவில் திருமணம் கைகூட என்ன செய்யலாம்? கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்க என்ன செய்யலாம்? தெய்வ நிலையை அடைய என்ன செய்யலாம்? போன்ற விரத முறைகளையும், அதனால் உண்டாகும் பலன்களை பற்றி விரிவாகப் பார்க்கலாம்…

விரதம் இருப்பது எப்படி?

பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனுஷ்டிக்கலாம்.

பங்குனி உத்திர தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும்.

பங்குனி உத்திரத்தன்று காலையில் நீராடியதுமே விரதத்தை தொடங்கி விட வேண்டும். பகலில் ஒருவேளை மட்டுமே உண்ண வேண்டும். குறிப்பாக வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம்.

அன்று முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம்.

வேலை உள்ளவர்கள் ‘ஓம் சரவண பவ” என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும்.

நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலிற்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலுக்கும் செல்லலாம்.

பங்குனி உத்திர திருமண விரதம் :

திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குனி உத்திர விரதமிருந்து இறைவனை வழிபட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கைகூடும். மேலும் சிறப்பான நல்லதொரும் வரன் கைகூடி வரும்.

கணவன்-மனைவி விரதம் :

திருமணமான தம்பதியினர் இருவருக்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்சனை அடிக்கடி நேர்ந்தால் பங்குனி உத்திர விரதம் இருப்பதன் மூலம் அந்த பிரச்சனைகள் விலகும். கணவன்-மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடு அன்பில் திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவும்.

தெய்வ நிலையை அடைய உதவும் விரதம் :

எவர் ஒருவர் தொடர்ந்து 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருக்கிறாரோ அவருக்கு மறுபிறவியானது தெய்வப்பிறவியாக அமையும்.

பலன்கள் :

பங்குனி உத்திர நாளில் நம்மால் முடிந்த உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும்.

கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். கல்வியும், செல்வமும் சேர்வதன் மூலம் சிறந்த தொழில் அதிபர்களாகவும், சிறந்த வேலையையும் பெற முடியும்.

உத்தியோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here