நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான தக்காளி ஊறுகாய் ரெசிபி!

0
99

நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான தக்காளி ஊறுகாய் ரெசிபி!

நம்மில் சிலருக்கு என்னதான் வகைவகையாக சமைத்து வைத்தாலும், ஊறுகாய் இருந்தால் தான் சாப்பாடு உள்ளே இறங்கும். வீட்டில் சாப்பிட ஏதும் இல்லாதபோது கூட, சாதத்துடன் தயிர் சேர்த்து ஊறுகாய் வைத்து சாப்பிட, பசி அடங்கும். வீட்டில் ஊறுகாய் இருக்கும்போது அவசரமாக சமைக்க வேண்டிய தேவை இருக்காது. இப்போது சுவையான தக்காளி ஊறுகாய் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

தேவையானவை: நாட்டுத் தக்காளி (நன்கு பழுத்தது) – அரை கிலோ, பூண்டு – 100 கிராம், வரமிளகாய் – 10, வெல்லம் – 2 ஸ்பூன், பெருங்காயம் – ஒரு டீஸ்பூன், கடுகு, வெந்தயம் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – 50 கிராம்

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வரமிளகாயை வறுத்த பின்னர், , வெந்தயம், கடுகை போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும்.

மீதியுள்ள எண்ணெயை வாணலியில்ஊற்றி, தோல் உரித்த பூண்டுகளை முழுதாக அப்படியே போட்டு வதக்கி, பாதி வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.தண்ணீர் சேர்க்க கூடாது. தக்காளியில் உள்ள நீரிலேயே பூண்டு, தக்காளி இரண்டும் வெந்து விடும். வேகும் போதே உப்பு சேர்க்கவும்.

பின்னர் . வெல்லம், பெருங்காயம், வறுத்துப் பொடித்த பொடி எல்லாவற்றையும் வெந்தபின் சேர்த்து, நன்றாக வதக்கி எல்லாம் சேர்ந்து வந்ததும், இறக்கினால் சுவையான தக்காளி ஊறுகாய் தயார். ஆறியதும் காற்று புகாத பீங்கான் பாட்டிலில் ஊறுகாயை அடைத்து வைத்து பல நாட்கள் பயன்படுத்தலாம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here