- நீரிழிவு நோய் நாவல்பழம், பாகற்காய், அவரைபிஞ்சு ஆகியவை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோய்க்கு நன்று.
- மதுமேகம் நாவல்கொட்டை சூரணம் 2 கிராம் நீரில் கலந்து காலை, மாலை குடித்து வர மதுமேகம், அதிமூத்திரம் கட்டுப்படும்.
- பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு குறைய
பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு குறைய நாவல் மரப்பட்டைத் தூளை மோரில் குடிக்க, பெண்களுக்கு இரத்தப் போக்கு குறையும். - ஆண்மை குறைவு நாவல் பழத்தின் கொட்டையை நீக்கி விட்டு சதையை பிசைந்து பாலில் கலந்து சிறிது தேன் சேர்த்து தொடர்ந்து குடித்து வந்தால் ஆண்மை குறைவு குறையும்.
- இரத்தம் ஊற இரத்தம் ஊற நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இரத்தம் ஊறும்.
- சர்க்கரை நோய் குறைய வேப்பம் பூ, நெல்லிக்காய், துளசி, நாவல் கொட்டை பொடி சேர்த்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குறையும்.
- சிறுநீர் கோளாறு நீங்க நாவல் பழக்கொட்டையை பொடியாக்கி நீருடன் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறு குறையும்.
- வாய்ப்புண் குறைய நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
- சீத பேதி குறைய நாவல் கொழுந்தைச் சாறு எடுத்து ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு மிளகளவு லவங்கப் பட்டைத்தூளுடன் 2 ஏல அரிசி சேர்த்து குடித்து வந்தால் சீத பேதி குறையும்.
- மூலம் குறைய பண்ணைக் கீரைச் சாறில் நாவல் பருப்பை அரைத்துச் சாப்பிட மூலம் குறையும்.
11.காலை,மாலை இருவேளையும் நாவல்கொட்டை சூரணத்தை 2 கிராம் அளவு எடுத்து நீரில் கலந்து குடித்து வர மதுமேகம்,அதிமூத்திரம் கட்டுப்படும்.
வயிற்றுப்போக்கு குறைய நாவல் இலை, மாங்கொழுந்து இவற்றை சம அளவு எடுத்து அரைத்து தயிரில் கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு குறையும்.