தென் சீன கடல் பகுதியில் திடீர் என்று அமெரிக்கா படைகளை குவித்து வருவது சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

0
99

இந்தியா – சீனா இடையே பிரச்சனை நிலவி வரும் நிலையில் தற்போது தென் சீன கடல் எல்லையில் அமெரிக்கா படைகளை குவிக்க தொடங்கி உள்ளது.

தென் சீன கடல் எல்லையில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதாக சீனாவே ஒப்புக்கொண்டு உள்ளது.

சீனாவின் தென் கடல் எல்லையை யார் சொந்தம் கொண்டாடுவது என்று சண்டை நடந்து வருகிறது. இது பல வருட சண்டை ஆகும். தற்போது இந்த சண்டை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அங்கு அமெரிக்கா தனது காலடி தடத்தை பதித்து இருக்கிறது.

எல்லை சண்டைதென் சீன கடல் எல்லையில் இருக்கும் அதிக அளவு எண்ணெய் வளம்தான் இதற்கு காரணம் ஆகும். அங்கு அதிக அளவில் இருக்கும் எண்ணெய்க்கு யார் சொந்தம் கொண்டாடுவது என்று போட்டி நிலவி வருகிறது.

இந்த கடல் தனக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறுகிறது. இங்கு சீனா சின்ன சின்னதாக தீவுகளை சீனா அமைத்து வருகிறது. அங்கு ராணுவத்தை சீனா குவித்து வருகிறது.கடல் எல்லைமொத்தமாக தென் சீன கடலை கைப்பற்றும் வகையில் சீனா அங்கு கொஞ்சம் கொஞ்சமாக படைகளை குவித்து வருகிறது. பல சிறிய சிறிய தீவுகளை கடந்த இரண்டு வருடங்களில் சீன அங்கு மொத்தமாக உருவாக்கி உள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

அதே சமயம் இந்த கடலை ஒரு பக்கம் மலேசியா சொந்தம் கொண்டாடுகிறது. இன்னொரு பக்கம் வியட்நாம் சொந்தம் கொண்டாடுகிறது

படைகள் குவிப்புஇங்கு மற்ற நாடுகளின் எல்லைக்குள் சீனாவின் போர் கப்பல்கள் அவ்வப்போது அத்துமீறுவது வழக்கமாகி வருகிறது. முக்கியமாக மலேசியாவின் எண்ணெய் கிணறுகள் இருக்கும் பகுதியில் சீனாவின் போர் கப்பல்கள் அவ்வப்போது அத்துமீறி வருகிறது. சீனா தொடர்ந்து ஆசிய – பசிபிக் கடலில் இருக்கும் நாடுகளிடம் இப்படித்தான் அத்துமீறி வருகிறது. இதைத்தான் தற்போது அமெரிக்கா தட்டிக்கேட்க தொடங்கி உள்ளது.

அமெரிக்க எப்படிஇதனால் தென் சீன கடல் எல்லையில் பெரிய அளவில் பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. அங்கு தற்போது அமெரிக்கா தனது போர் கப்பல்களை, ஏவுகணைகளை, ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை களமிறக்கி உள்ளது. இதை சீனாவே ஒப்புக்கொண்டுள்ளது. தென் சீன கடல் எல்லையில் அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளது என்று சீனா ஒப்புக்கொண்டு இருக்கிறது.

என்ன அறிக்கைஅமெரிக்கா தனதுமற்றும்எனப்படும் போர் கப்பல்களை சீன எல்லைக்கு அனுப்பி வைத்தது. அதோடு அமெரிக்காவுடன் மலேசியாவின் போர் கப்பல்களும் கூட்டு சேர்ந்து அங்கு சோதனைகளை செய்து வருகிறது . சீனாவின் அறிக்கையின்படி தென் சீன பகுதியில் அமெரிக்கா 375000 படைகளை குவித்து இருக்கிறது. இதில் 60% கடற்படைதான். 40% தரைப்படை மற்றும் விமானப்படை ஆகும்.எத்தனை வீரர்கள்அதிலும் இங்கு 85000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதி நவீன ஆயுதங்களும் இங்கே களமிறக்கப்பட்டுள்ளது. நேற்று இரவில் அதிக அளவில் அமெரிக்கா இங்கு படைகளை குவித்து இருக்கிறது. ஒரே இரவில் நடந்த இந்த மாற்றம் சீனாவை கலங்க வைத்துள்ளது.

நேற்று இரவு பசிபிக் பகுதிக்கு அமெரிக்கா இப்படி அதிக அளவில் படைகளை அனுப்பியது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.கடும் எச்சரிக்கைஇதற்கு சீனா தற்போது கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் சீன கடலை அமெரிக்கா அபகரிக்க பார்க்கிறது. இது எங்களுக்கு சொந்தமான கடல். இங்கே அத்துமீறல்களை நிகழ்த்தினால் பொறுத்துக் கொள்ளமுடியாது. அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கப்படும். அமெரிக்க நினைத்து பார்க்க முடியாத பதிலடியை சீனா கொடுக்கும், என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here