திமுகவின் திட்டங்கள்

0
6

சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:

மாத மின் கட்டணம்

▪️மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் திட்டம் வரும்.

உடன்குடி, செய்யூர் மின் திட்டங்களை செயல்படுத்துவோம்.

ரேஷன் – ஜூன் 3-இல் ரூ.4000 அனைவருக்கும் உறுதி

▪️கலைஞரின் 97-ஆவது பிறந்த நாளான ஜூன் 3ல் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கு ரூ.4000 கிடைக்கும்.

▪️ரேஷன் கடைகள் அனைத்தும் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும். விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் அட்டை வழங்குவோம்.

▪️அரிசி தவிர மற்ற பொருட்களை, பாக்கெட்டுகளில் வழங்க ஏற்பாடு செய்வோம்.

▪️ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும், மானிய விலையில், மூன்று எல்.இ.டி. பல்புகள் வழங்கப்படும்.

▪️மாதம் தோறும், 1 கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும். உளுந்தம் பருப்பு மீண்டும் தருவோம்.

முதியோர், திருநங்கையர் ஓய்வூதியம்

▪முதியோர் ஓய்வூதிய தொகையை, 1,000 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்துவோம். மாவட்ட தலைநகரங்களில் முதியோர் இல்லங்கள் அமைப்போம்.

▪️திருநங்கையர் ஓய்வூதியம், 1,500 ரூபாயாக உயர்த்துவோம். அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் வீடுகள் ஒதுக்கப்படும்.

பிரசவ சலுகைகள்

▪️அரசு பணிக்கு செல்லும் பெண்களுக்கு, ஒன்பது மாத பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும்.

▪️கர்ப்பிணியர் உதவித்தொகை, 18 ஆயிரம் ரூபாயில் இருந்து, 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவோம்.

பெண்களுக்கு…

▪️பத்து லட்சம் கிராமப்புற பெண்களுக்கு, சிறு தொழில் துவங்க 50 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்குவோம். திருமணமாகாத, ஆதரவற்ற மகளிருக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப, அரசு வேலை தரப்படும்.

▪️அரசு வேலைவாய்ப்புகளில், பெண்களுக்கு, 30 சதவீத இட ஒதுக்கீட்டை, 40 சதவீதமாக உயர்த்துவோம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு…

▪️மாற்றுத் திறனாளிகளுக்கும், அவர்களுடன் செல்லும் ஒரு உதவியாளருக்கும், அரசு சாதாரண பஸ்களில் இலவச பயணச் சலுகை வழங்குவோம். மாற்றுத் திறனாளிகளுக்கு, ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படும்.

பள்ளிக் குழந்தைகளுக்கு பால்

▪️பள்ளிக் குழந்தைகளுக்கு காலையில் பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதால், பால் உற்பத்தியாளர்கள் முழுமையாக ஆவின் நிறுவனத்திடமே பால் விற்பனை செய்யும் வாய்ப்பு உருவாக்கப்படும்.

உணவுக்கூடை திட்டம்

▪️குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க, குழந்தைகள் நல பாதுகாப்பு திட்டம், ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் கொண்ட உணவுக்கூடை திட்டம் செயல்படுத்தப்படும்.

ஜல்லிக்கட்டு

▪️ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத் தொகையாக, மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்.

சட்டசபை டிவி

▪️சட்டசபை நிகழ்ச்சிகள், ‘டிவி’க்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

தீர்வுக்கு தனி துறை

▪️’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில், மக்களின் அன்றாட பிரச்னை குறித்த மனுக்களை பெற்று, ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதற்கென ஒரு தனி துறை, முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உருவாக்கப்படும்.

▪️மனுக்களை ஆய்வு செய்ய தொகுதி அளவில், ஊராட்சி அளவில் முகாம்கள் அமைத்து, நேரடி விசாரணை நடத்தி, நிறைவேற்றி தரப்படும்.

▪️அனைத்து தொகுதிகளிலும், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் குறை கேட்கும் முகாம்கள் நடத்துவோம். ஆட்சி நிர்வாகம் சிறந்த முறையில் செயல்படும் வகையில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் சீரமைப்பு செய்வோம்.

போலீசுக்கு வார ‘லீவு’

▪️அனைத்து போலீசாருக்கும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவோம்.

▪️போலீசாருக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன், இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்கப்படும். உயிர் நீத்தவர்கள் குடும்பத்துக்கு, 1 கோடி ரூபாய் ஆறுதல் தொகை வழங்குவோம்.

▪️போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு, ஒரு கால வரையறைக்குள், அதன் பரிந்துரைகளை அமல்படுத்துவோம்.

▪️போலீசார் குறைகளை சரி செய்வதற்காக, மாநில மற்றும் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் அமைப்பை ஏற்படுத்துவோம். மருத்துவப்படி, இடர்கால படியையும் உயர்த்துவோம்.

▪️இரண்டாம் நிலை போலீஸாக பணியில் சேருபவர்களும், ஏழு ஆண்டுகள் முதல்நிலை போலீஸாக பணி புரிந்தவர்களும், 10 ஆண்டுகளில் ஏட்டாகவும், 20 ஆண்டுகளில் எஸ்.எஸ்.ஐ., ஆகவும் பதவி உயர்வு வழங்குவோம்.

கலைஞர் உணவகம்

▪️முதல் கட்டமாக, 500 இடங்களில், ‘கலைஞர் உணவகம்’ அமைப்போம். இரவு நேரக் காப்பிடங்களும் அமைக்கப்படும்.

குடிநீர்

▪️லாரிகள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப் படுவதால், விபத்துகள் நடக்கின்றன. இதை தவிர்க்க, புதிய குழாய்கள் அமைத்து, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்வோம்.

▪️பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில், விண்ணப்பித்த 15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவோம்.

▪️அனைத்து கடலோர மாவட்டங்களிலும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரிவு படுத்தப்படும்.

50 லட்சம் பேருக்கு வேலை

▪️ஐந்து ஆண்டுகளில், 50 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்க, மாநில திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பை ஏற்படுத்துவோம்.

▪️இயற்கை வளங்களை பாதுகாக்க, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 75 ஆயிரம் இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவர். இவர்களில், 30 ஆயிரம் இடங்கள், பெண்களுக்கு ஒதுக்குவோம்.

▪️மேலும், 75 ஆயிரம் சாலைப் ளர்கள், 25 ஆயிரம் திருக்கோவில் பணியாளர்களையும் நியமிப்போம். மக்கள் நலப் பணியாளர்களாக, 25 ஆயிரம் மகளிர் நியமிக்கப்படுவர்.

சன் டிவி போன்ற தனியாரில் 75% தமிழருக்கே இடஒதுக்கீடு

▪️தொழில் துறையில் கடனுதவி வழங்க, 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவோம்.

தமிழக தனியார் தொழில் நிறுவனங்களில், 75% வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்றுவோம்.

▪️வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் 15 பேரைக் கொண்டு, ‘இளைஞர் சுய முன்னேற்ற குழுக்கள்’ அமைக்கப்படும். அவர்கள் தொழில் துவங்க, 25% மானியம் வழங்குவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here