தஞ்சை கோபுரத்தையும் மிஞ்சிய தங்கத்தாரகை வர்ஷிகா..!

0
63

உலக மகளிர் தின கொண்டாட்டத்தில்…!

தஞ்சையில் தஞ்சை கோபுரத்தையும் மிஞ்சிய!!
தங்கத்தாரகை!
தங்க மங்கை!!

செங்கபட்டுத்தான் கிராமத்தில்!
வர்ஷிகா! என்ற இளம் தளிர்! புள்ளிமானாய்
துள்ளி யோடி!!
புவியில் தனக்கென உலகசாதனைதேடி!!

வர்ஷிகாவின், வசிகர
தொடர் ஓட்டம்!!
இருபத்திமூன்றுகி/மீ தொலைவை!!
இரண்டு மணிநேரத்தில் கடந்தது இந்த மானோட்டம்!!

பால்குடி மனம் மாற பச்சிளம் சிட்டு!!
பாரில் பலர்நெஞ்சைதொட்டு!!
ஓடிஉலகசாதனை படைத்த!
ஒன்பதே வயது! மலராத மொட்டு!!

ஓடும் ஒன்பது கோள்களையும்!
ஒரு நொடி நின்று வியக்கவைத்தாள்!
தமிழக மண்ணில் குட்டி தேவதை!!

சிங்கப் பெண்ணே!!
மண்ணுக்குள் புதைந்துகிடந்தாய்!! வைரமாய்!!
விண்ணுக்குள் ஒழிந்து கிடந்தாய்பௌர்ணமிநிலவாய்!!
மனதிற்குள்‌ புதைந்தாய் !!வீரத்தின் எழுச்சி வித்தாய்!!

கடலுக்குள்கிடந்தாய்முத்தாய்!!
காணகிடைத்தாய் தமிழகத்தில் ,அழியா! சொத்தாய்!!

வீரத்தின் விளைநிலமே!!
விளையாட்டில் நீ‌ தனிரகமே!!
வீறு கொண்டெழுந் தாய்!! தஞ்சை யை! விண்ணிலே ஒளிரச்செய்தாய்!!

தமிழகத்து இளம்தடகளகண்ணே! தமிழகத்து வர்ஷிகா! ஓடுகளத்தில்சிங்கப்பெண்ணே!!

பயிற்றுவித்த!! ஊக்குவித்த!! உதவிக்கரம் நீட்டிய!!
உறுதுணையான! பெற்றோர் களுக்கு நன்றியும்!!
வர்ஷிகாவிற்கு பாராட்டும்!!

தொடரட்டும்! தொடர்ஓட்டம்!!
தொடர்ந்து சாதிக்கட்டும்!! இவள் நிற்காசாதனை நீரோட்டம்!!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here