இந்தியர்களின் அடிமை இன்னலை நீக்கியது,சுதந்திரதினம்!!
இந்தியர்களின் இதயத்தை இனிய காற்றை சுவாசிக்க செய்தது,
குடியரசுதினம்!!அடிமை விலங்கொடித்தது, சுதந்திரதினம்!!
அன்பில் நம்மைநாமே ஆளவைத்தது குடியரசு தினம்!!
பலமாநில சுதந்திரவீரர்களின் பலத்தோடும்!!
பலசுதந்திர வீர! தியாகிகளின், இன்னுயிரின் வாசத்தோடும் !!
பறக்கட்டும் பாரில் பட்டொளி வீசி !
பாமரனும் பரங்கியரைஎதிர்த்தநினைவினை நேசி!!
எழுபதுஆண்டை கடந்தாலும் இந்தியா!!
இதுவரை சுதந்திரமாய் பயணித்தது!!
வெள்ளையரின் கையில் மீண்ட இந்தியா!!
வெறி பணவீணர்கள்களின் (கார்பரேட்) முதலாளிகளின் கையில் மாட்டிக்கொண்டதே!!
(வேளாண் சட்டத்தில்)விவசாயிகளை அடிமையாக்கி!!
சூளுரைப்போம்!! சூட்சமமாய் இந்தியதாயை!
சமதர்ம ஆட்சியை மலரச்செய்வோம்!!
வரும்ஆண்டிலாவது, நோய்களின்றி!!
பணப்பேய்களின் அடிமை இன்றி!!
சாதியம் கழைந்து!
சமத்துவம் நிறைந்து!
மதுவைகழைந்து! மாதர்களின் வன் கொடுமை கழைந்து!!
மலழையர்களின் மானம் காத்து!!
மாவீரசுதந்திர தியாகிகளை நினைவுகூர்ந்து!!
அனைவருக்கும் குடியரசுதின வாழ்த்தை பகிர்ந்து!!
வந்தேமாதரம்!! வந்தேமாதரம்!! ஜெய்ஹிந்!!
குடியரசு தினவிழாவை ! முடியரசுதினமாக மாற்றாது! சபதம் எடுப்போம்!!
இந்திய அரசியல்சட்டம் வகுத்து தந்த பீமா ராவ் ராம்ஜி மற்றும்
குழு தலைவர்களையும்
நினைந்து !!
உலகிலேயே மிகபெரிய அரசியல்சட்டநிர்ணயசாசனம்
இந்தியாவே! பெற்றுள்ளது!!
பெருமிதத்தில் பேரன்பு கொள்வோம்!
சாதி மதங்களுக்கு இடம்தராது!
சுதந்திரம்!
சமத்துவம்! சகோதரத்துவம்!!
மனிதநேயம்!
தராகமந்திரமாக்கி
இந்தியதரணியை உலகில் தலைநிரச்செய்வோம்!!
ஜெய்ஹிந்த்…!
-முத்துமாணிக்கம்,சங்குப்பட்டி.