ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? பகுதி-14

0
217

எல்லா காலகட்டங்களிலும் சாமானிய குழந்தைகளுக்கான கல்வி என்பது, சமுதாயத்தில் தொடர்ந்து மறுக்கப்பட்டுகொண்டேதான் வந்திருக்கிறது.
சாஸ்திர, சம்பரதாயங்களின் பெயராலும், குலத்தின் பெயராலும்,
அப்புறம் பெற்றோர்களின் அலட்சியத்தாலும்.

இன்னார் மட்டும் தான் கல்வி கற்கவேண்டும் என சாஸ்திர, சம்பிரதாய, வேத, இதிகாசங்களை காரணம் சொல்லி சாமானிய குழந்தைகளுக்கான கல்வி மறுக்கப்பட்டதை பற்றியோ,
மற்றும் மேலோர் கீழோர், ஆண்டான், அடிமை எனும் நிலையை வைத்து சாமானிய குழந்தைகளுக்கான கல்வி மறுக்கப்பட்டதை பற்றியோ, நாம் இங்கே விவாதிக்கவேண்டிய தேவையும் இல்லை.
அப்படியான ஒரு நிலையும் இப்போது இல்லை.

ஏனென்றால் ஒவ்வொரு காலகட்டத்திலும் நல்லோர் பலரால் தடைகள் உடைக்கப்பட்டு, உடைக்கப்பட்டேதான் சாமானிய குழந்தைகளுக்கான கல்வி உறுதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதோடு மட்டுமில்லாமல்,
இன்று அனைவருக்கும் கட்டாய கல்வி எனும் சட்ட வடிவமும் பெற்று தரப்பட்டிருக்கிறது.

எதற்காக இதனை இங்கே சொல்லவேண்டும் என்றால்..
ஒவ்வொரு காலகட்டத்திலும், போராட்டங்களின் மூலமாகத்தான் சாமனியர்கள் கல்வியை பெற முடிந்திருக்கிறது எனும் வரலாற்றை நினைவு படுத்துவதற்காகத்தான்.

ஆனால் சுட்டிக்காட்டி சொல்லவேண்டியது என்னவென்றால், சமுதாயத்தால் சாமானிய குழந்தைக்கான கல்வி மறுக்கப்பட்டபோது அதனை போராட்டங்கள் மூலமாக பெற்றுக்கொடுக்கப்பட்டதை போல,
பெற்றோர்கள் மூலம் குழந்தைகளுக்கான கல்வி மறுக்கப்பட்டபோது, மறுக்கப்படும்போது யாராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

இன்றைய பெரும்பாலான குழந்தைகளுக்கான கல்வி அவர்களின் பெற்றோர்களால்தான் மறுக்கபடுகிறது, என்பதை சொல்வதற்கும், கேட்பதற்கும், கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் கூட,
அதுவே மறுக்கமுடியாத உண்மை.
அது அன்பில்லாமையினாலோ,
அக்கறையில்லாமையினாலோ, நிகழ்த்தப்படுபவை அல்ல.
பொறுப்பினை மறப்பதால் நிகழும் வினை.

எல்லா பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகளை பற்றிய மிகப்பெரிய ஒரு கனவு இருக்கும்.
ஆனால் அந்த கனவை நனவாக்குவதில் காட்டும் தீவிர முனைப்பும்,
அல்லது
அதைபற்றிய ஒரு சிறிய அலட்ச்சியமும் தான் உங்கள் அடுத்த தலைமுறை இந்த பூமியில் எப்படிபட்ட வாழ்க்கையை வாழவேண்டும் என்பதையே தீர்மானிக்கிறது என்றால்..
அந்த கனவுக்கு நீங்கள் எத்தனை உயர்வான மதிப்பளிக்கவேண்டும்?

“உங்கள் குழந்தை என்னவாகவேண்டும்?

“டாக்டர் ”

“சரி அதற்காக நீங்கள் என்ன ஏற்பாடு செய்து வைத்திருக்கிறீர்கள்?

“அட போப்பா! இப்பதான் புள்ளையே பொறந்திருக்கு, அதுக்குள்ளபோயி இதையெல்லாம் ஏற்பாடு பண்ணிவைக்க சொல்ற!”

“உங்க குழந்தை என்னவாக வேண்டும்?”

“கலெக்டர்”

“சரி அதற்காக நீங்கள் என்ன ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறீர்கள்?”

“அட போப்பா!
புள்ள இப்பத்தான் நடக்கவே ஆரம்பிச்சிருக்கு, அதுக்குள்ளபோயி இதுக்கெல்லாம் திட்டமிட சொல்ற”

“உங்கள் குழந்தை என்னவாக வேண்டும்?”

“என் குழந்தை என்னை மாதிரி வேலைக்கெல்லாம் போயி கஷ்டப்பட்டாம, நாளு பேருக்கு வேலை கொடுக்குற அளவுக்கு ஒரு முதலாளியா உக்கரனும்”

“சரி அதற்காக நீங்கள் என்ன ஏற்பாடு செய்து வைத்திருக்கிறீர்கள்?

” அட என்னப்பா நீ!
புள்ள இப்பத்தான் ஸ்கூலுக்கே போக ஆரம்பிச்சுருக்கு
அதுக்குள்ள போயி இதையெல்லாம் யோசிக்க சொல்ற”

“சரி எப்போது யோசிக்கப்போகிறீர்கள்?
எப்போது அதற்கான ஏற்பாட்டை துவங்க போகிறீர்கள் ?”

” அதுக்கு இன்னும் எத்தனையோ காலம் இருக்கு.
மெதுவா ஏற்பாடு செய்யலாம்”

“சரி!
ஒருவேளை இன்றைக்கு உங்கள் குழந்தையை ஒரு மெடிக்கல் காலேஜில் சேர்த்து படிக்கவைப்பதென்றால்
எவ்வளவு தேவைப்படும்?”

” அது லட்சகணக்குல தேவைப்படும் ”

“எத்தனை லட்சம்?”

“அதை எப்படி இப்பவே உறுதியா சொல்லமுடியும்.”

“சரி உங்கள் குழந்தை நிஜமாவே காலேஜில் சேருகிற காலத்தில் அன்றைய மதிப்பில் எவ்வளவு தேவைப்படும்?”

“நிச்சயமாக இன்றைக்கு ஆகும் செலவைவிட அன்றைக்கு அதிகமாகத்தான் தேவைப்படும்.”

“அதிகமென்றால்?”

“ரெண்டு, மூனு மடங்கு ஆகலாம்.”

“அவ்வளவு தொகை ஆகுமென்றால்,
அதை ஒரே நாளில் தயார் செய்திட முடியும் என்ற நம்பிக்கை வளர்பது நல்லதா?
அல்லது இன்றிலிருந்து ஆரம்பித்தால் கொஞ்ச, கொஞ்சமாக சேர்த்து விடலாம் என்கின்ற நம்பிக்கையை வளர்ப்பது நல்லதா?

“அட அதெல்லாம் சாதாரணமாக செய்திடலம்பா.
புள்ள ஆசைப்பட்டுட்டா நிறைவேற்றி வைக்காம விட்டுற முடியுமா?”

“இந்த செலவையெல்லாம் யார் சம்பாத்தியத்துல செய்யனும்?”

“வேற யாரு?
நாந்தான் செய்யனும்.”

” உங்களை விட்டா வேற யாரு இதையெல்லாம் செய்வாங்க?”

“எம் புள்ளைக்கு வேற யாருப்ப செய்யனும்?
நான் குத்துகல்லாட்டம் இருக்கும்போது?”

“ஒருவேளை நீங்கள் இல்லையென்றால்?”

“அட நீ வேறப்பா!
இல்லாம நான் எங்க போயிறப்போறேன்”

“எல்லோருமே அந்த நம்பிக்கையோட தான் வாழ்க்கையை பார்க்கிறாங்க,
ஆனா எத்தனை பேர் ஜெயிக்கிறாங்க?,

” அதுக்காக எல்லாம் ஒருநாள் முடியப்போகுதுன்னு இன்னைக்கே நாமலும் ஒரு முடிவுக்கு வந்துற முடியுமா?”

“சரி!
உங்கள் குழந்தை என்னவாக ஆகவேண்டும்,
என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களோ.. அந்த கல்வியை பெறுவதற்கான அத்தனை தகுதியையும் வளர்த்துக்கொண்டு உங்கள் குழந்தை உங்கள் முன்னால் வந்து நிற்க்கும்போது,
அன்றைய சூழ்நிலையால் ஒருவேளை அந்த கல்வியை வாங்கி கொடுக்க முடியாத ஒரு நிலமை ஏற்பட்டால்?”

“அப்படியெல்லாம் விட்டுருவோமா,
அதுக்கு முன்னாலேயே எல்லா ஏற்பாட்டையும் முடிச்சு வச்சுருவோம்ல”

“அதுக்கு முன்னாலேயே எல்லாம் முடிச்சு வச்சுருவீங்கன்னா,
அப்போ அதற்கான ஏற்பாட்டை எப்போதான் துவங்குவீர்கள்?
எப்போதான் உறுதிபடுத்தி வைப்பீர்கள்?”

“அட அதெல்லாம் பதினைந்து, பதினாறு வருடத்துக்கு அப்புறம் நடக்கப்போறது,
முதல்ல இப்போ இருக்கிற பிரச்சனையை முடிப்போம்.
இதையெல்லாம் ஆற அமர யோசிப்போம்.”

இதில் எந்த அலட்சியத்தால் உங்கள் குழந்தையோ,
அல்லது உங்களுக்கு தெரிந்த ஒரு குழந்தையோ தங்கள் வாழ்க்கையை தொலைத்தார்கள்?

இப்படியான அலட்ச்சியங்களால் இங்கே எத்தனை, எத்தனை குழந்தைகள் தாங்கள் ஆசைபட கல்வியை பெறமுடியாமல் கிடைத்த கல்வியை கடனே என்று பயின்று முடித்து,
நினைத்த வாழ்க்கையை வாழ முடியாமல் கிடைத்த வாழ்க்கைக்குள் சிறைபட்டு கிடக்கிறார்கள் என்று தெரியுமா?

என் நண்பர் ஒருவர்!
அவரின் பெண் பிள்ளைக்கு இப்போது இருபது வயதாகிறது,
அந்த பிள்ளை பிறந்த முதல் நாளிலிருந்து இந்த நாள் வரையில், அந்த பிள்ளையின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு பவுன் தங்க காசு வாங்கி வீட்டில் வைத்துவிடுவார்.
அந்த பிள்ளையின் தற்போதைய வயதை கணகிட்டு பார்த்தால்,
அந்த பிள்ளைக்காக இருபது பவுன் தங்கம் சேர்த்து வைத்துவிட்டார்.

ஏன் அவர் அப்படி செய்யவேண்டும்?
இதற்கு பெயர் தான் திட்டமிடல்.
என்றைக்கு அந்த குழந்தை பிறந்ததோ..
அன்றைக்கே அந்த குழந்தையோடு சேர்த்து, அதற்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
ஒரு திருமணத்தில் முக்கியமானதாகவும், முதன்மையானதாகவும் பார்க்கப்படும் பொருள் தங்கம்,

இன்றைய சூழ்நிலையில் ஒரே நாளில் இருபது பவுன் மொத்தமாக வாங்குவதென்றால், அவரால் முடியாத விசயமாக இருக்கலாம்.
அல்லது தயக்கத்தை தர கூடிய விசயமாக கூட இருக்கலாம்.
ஏனென்றால் இன்றைய மதிப்பில் இருபது பவுனுக்கு சுமார் பத்து லட்சம் வரையில் தேவைப்படலாம்,
ஆனால் ஒரு வருடத்தில் ஒரு பவுன் வாங்குவதென்பது சாத்தியமான விசயம்தான்.
இதுதான் முறையான திட்டமிடல்.

கல்வியும் அப்படிதான்.
என்றைக்கு உங்கள் குழந்தை பிறந்ததோ.. அன்றைக்கே அந்த குழந்தையோடு சேர்த்து, அந்த குழந்தைக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துகொடுக்கும் பொறுப்பும்,
உங்களிடம் தான் ஒப்படைக்கப்படிருக்கிறது,
ஒருவேளை உங்களிடம் கோடான கோடி பணம் இருந்துவிட்டால் எந்த திட்டமும் தேவையில்லை, உங்கள் குழந்தைக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்து கொடுப்பதற்கு.

ஆனால் உங்கள் குழந்தைக்கு நீங்கள் பெற்று தரப்போகும் தரமான கல்வியின் மூலமாகதான் அதனை செய்யப்போகிறீர்கள் என்றால்…
அதற்கு சரியான, முறையான திட்டமிடல் அவசியமாகிறது!
எல்லாவற்றிக்கும் மேலாக உறுதி படுத்துதல் என்பதும் அவசியமாகிறது.

எங்கேயெல்லாம் உறுதிபடுத்தி வைக்கவேண்டும் என்கின்ற ஒரு நிலை ஏற்படுகிறதோ,
அங்கேயெல்லாம் இன்சூரன்ஸ் மூலமாகத்தான் அதனை செய்துமுடிக்கப்படுகிறது. தொடரும்…

-கூ, சுரேஷ்வரன்
இன்சூரன்ஸ் ஆலோசகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here