ஆகஸ்ட் மாதத்தில் அபூர்வ பிரதோஷம் வருகிறது…!

0
76

ஏராளமான அற்புதங்களும், அதிசயங்களும் நடந்து வருகிறது.அந்த வகையில் ஆகஸ்டு மாதத்தில் அபூர்வ பிரதோஷம் வருகிறது.ஒரு மாதத்தில் இரண்டு (2) பிரதோஷம் தான் வரும்.ஆனால் இந்த சார்வாரி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் சுமார் மூன்று(3) பிரதோஷம் வருவது அபூர்வ பிரதோஷமாக கருதப்படுகிறது..

  1. 1.8.2020 ஆடிமாதம் சனிப்பிரதோஷம்.
  2. 16.8.2020 ஆடிமாதம் ஞாயிறு ஆதிவாரம் பிரதோஷம்.
  3. 30.8.2020. ஞாயிறு ஆதிவாரம் பிரதோஷம் ..

இந்த மாதிரி பிரதோஷம் அத்தி பூத்தால் போல் தான் வரும்.ஆகவே அன்பர்களே உங்கள் ஊர்களில் வழிபாடு இல்லாமல் இருக்கும் ஆலயத்தில் சென்று தொடர்ந்து மூன்று பிரதோஷ வழிபாடு செய்தால்

கீழ்கண்ட பலன்களை அனுபவிக்கலாம்.

  1. தடைபெற்ற திருமணம் நடைபெறும்.
  2. குழந்தை பாக்கியம் கிட்டும்.
  3. கடன் பிரச்சனை தீரும்.

ஆகவே அன்பர்களே தொடர்ந்து இடைவிடாமல் மூன்று பிரதோஷ வழிபாடுகளை செய்து இறைவனிடத்தில் பலன்களை பெற்று செல்லுங்கள்.கோயிலுக்கு போக முடியாமல் இருந்தால் தங்கள் இல்லத்திலே ஓர் சந்தன லிங்கத்தை உருவாக்கி தூபம், தீபம், வெற்றிலை ,வாழைப்பழம், வைத்து அர்ச்சனை செய்து கற்பூரம் தீபாரதனை செய்து வழிபாடு செய்தால் மிகுந்த பலனை தரும்.பிரதோஷ வழிபாட்டின் பலனும் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here