அரணாகும் ஆண்கள்…

0
19

அரணாகும் ஆண்கள்…

உடல் மட்டுமே பிரதானம் என்றால்
அதற்கு எத்தனையோ இடங்களுண்டு…..
உறவின் முறையை சொல்லி
கொச்சைப் படுத்தாதீர்கள்…
இனி எந்த பெண்ணும்
உண்மையான உறவைக்கூட நாட
அச்சப்படுவாள்….

வலைதளங்கள் வெறித்தனமாய்
வலை வீசுகின்றன பெண்களுக்கு
பெண் ஓர் போதை பொருளல்ல
உங்கள் போதைக்கு
அவர்கள் ஊறுகாயுமல்ல…

உங்கள் வீட்டிலும் ஏதோவொரு
உறவுமுறையில் பெண்கள் இருப்பார்கள்
நினைத்து பாருங்கள்
அவர்களின் நிலையையும்..

பெண்களே
அனைவரிடமும் அளவோடு
உறவாடுங்கள
அழிவை நோக்கி செல்லும் முன்
ஆறாவது அறிவை பயன்படுத்தி
சற்றே சிந்தியுங்கள்….

ஆண்கள்தான் பெண்களின் (பலம்)
பாதுகாப்பு
வேலியே பயிரை மேய்ந்தால்
நாங்கள் என்ன செய்வோம்?…

பெண்களே…
நாமும் பெண் சுதந்திரத்தை
அளவாய் பயன்படுத்தி ஆனந்தமடைவோம்…
நிச்சயமாக ஆண்கள் நமக்கு
அரணாக இருப்பார்கள்
என்ற நம்பிக்கையில்… .

-சசிகலா திருமால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here