அரசு வெளியிட்ட நெறிமுறைகள்

0
82

அரசு வெளியிட்ட நெறிமுறைகள்:

* கடைகளில் நுழைவாயிலில் கிருமிநாசினி வைத்து இருக்க வேண்டும்.
* உடல் வெப்ப பரசோதனை அவசியம் செய்ய வேண்டும்.
* நோய் அறிகுறி இல்லாத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
* கடைக்குள் இருக்கும் முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
* வாடிக்கையாளர்களை பிரித்து கடைகளுக்குள் அனுப்ப வேண்டும்

படப்பிடிப்பு வழிக்காட்டு நெறிமுறைகள்:

* 75 தொழிலாளர்களை மட்டும் பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்த வேண்டும்.
* கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் படப்பிடிப்புகளை நடத்தக்கூடாது.

* படப்பிடிப்புகளில் பங்கேற்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* படப்பிடிப்பில் பங்கேற்பவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும் .

* படப்பிடிப்பு நடத்தும் இடங்களில் எச்சில் துப்பக்கூடாது

பூங்காவுக்கு வழிக்காட்டு நெறிமுறைகள்:

* பூங்காக்களில் இருக்கும் முழு நேரமும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

* உடல் வெப்பத்தை பரிசோதனை செய்த பிறகே பூங்காவுக்குள் அனுமதிக்க வேண்டும்.

* நுழைவாயிலில் சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்பே அனுமதிக்க வேண்டும்.

* பூங்காக்களுக்கு செல்வோர் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச்செல்ல வேண்டும்.

* பூங்காக்களில் திண்பண்டங்கள் விற்கவும், எடுத்துச்செல்லவும் அனுமதி இல்லை.

* கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வருவோரை அனுமதிக்கக்கூடாது.

ஓட்டல்களுக்கு வழிக்காட்டு நெறிமுறைகள்:

* சமையல் கூடத்திலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

* காய்கறிகள், பருப்பு, அரிசி ஆகியவற்கை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும்.

* சமைக்க பயன்படுத்தும் கத்தி உள்ளிட்ட கருவிகளை சோப்பால் கழுவ வேண்டும்.

* சமையல் கலைஞர்கள் அதற்கான உடை, முகக்கவசனம் அணிதல், தலைமுடியை மூடி இருக்க வேண்டும்.

* சமையல் கூடத்தின் தரை, அலமாரிகளை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here