UPSC – சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

0
47

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(UPSC) அமைப்பு மத்திய அரசின் பல்வேறு உயர் அதிகாரி பணியிடங்களை தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி பணி நியமனம் செய்து வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் IAS, IPS உள்பட 829 இடங்களுக்கு சிவில் சர்வீசஸ்( Civil Services Exam) தேர்வு நடைபெற்றது.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல் நடைபெற்றது. கொரோனா காலக்கட்டத்தால் நேர்காணலில் தாமதம் ஏற்பட்டு, ஜூலை கடைசி தேதி வரை நேர்காணல் நடந்து முடிந்தது.

www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு
829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக UPSC அறிவித்துள்ளது.

இந்திய அளவில் பிரதீப் சிங் முதலிடம்,
ஜதின் கிஷோர் – இரண்டாமிடம் ,
பிரதிபா வர்மா, இடத்தையும் பிடித்து உள்ளனர்.

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7ம் இடத்தை பிடித்துள்ளார். இவர் பயிற்சி மையம் எதிலும் சேராமல் ஆன்லைன் மூலம் படித்து தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்

பிரியங்கா 68வது இடம்,
முருகானந்தம் 119வது இடம்,
கார்த்திகேயன் 136வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

சங்கீதா,
விபு கிருஷ்ணா, அபிநயா ஆகியோரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here