வலம்புரிச் சங்கு தரும் தோஷ நிவர்த்தி.

0
37
  • வலம்புரி சங்கில் வைத்த தீர்த்தத்தைக் கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும்.
  • கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில், நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.
  • நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, ‘பேதாண்டப் பெதுவி’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.
  • வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை வலம்புரிச் சங்கில் இட்டு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.
  • செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள், செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி, திருமணம் நடைபெறும்.
  • பவுர்ணமி தோறும் வலம்புரிச் சங்குக்கு, குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்து வர கடன் பிரச்சினைகள் தீரும். வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றி வழிபட்டாலும் கடன் பிரச்சினை அகலும்.
  • சுத்தமான, உண்மையான வலம்புரிச் சங்கு கொண்டு பூஜிக்கப்படும் வீட்டில், பில்லி, சூனியம், ஏவல்கள் நெருங்காது.
  • நாம் வழிபடும் தெய்வத்திற்கு வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்வதால், 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம்.
  • பிறந்த குழந்தைக்கு காய்ச்சல் வந்தால், வலம்புரிச் சங்கில் நீர் ஊற்றி, அதில் ருத்ராட்சம் இட்டு, அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட காய்ச்சல் நீங்கும்.
  • பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு, அதில் வலம்புரிச் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவு பஞ்சம் ஏற்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here