வகை வகையான மனிதர்களை அடுக்கி வைத்திருக்கும் அலமாரி.
உயர்வு தாழ்வு என்றெல்லாம் பேதம் இல்லை. மேலே உள்ளவன் கீழே வருவான் வழக்கமான நாட்களில்.
கீழே உள்ளவன் மேலே போவான் வெள்ளப்பெருக்கு நாட்களில்…..
அனைவருக்கும் ஒரே மொட்டைமாடி.
பொங்கல் விழாவும் அதே சமையலறையில். காணும் பொங்கல் கடற்கரையில்.
நகரத்திற்கு மிக அருகில்… மனங்களுக்கு மிக தொலைவில் அசையாது நிற்கும் தீப்பெட்டிகள்
குறைந்தது நான்கு பேரின் பெயரை மனம் நிறுத்திக் கொள்ள தடுமாறும்.
மாதாமாதம் செலவுகள் நீள்வதில் இது
நமக்கு சொந்தமாய் ஒரு வாடகை வீடு.
-ம. வினு மணிகண்டன்