முக்கியமான பாரம்பரிய மருத்துவ குறிப்புகள்.

0
74

1.ஒற்றைத் தலைவலிக்கு :

எட்டிக் கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தலைக்குக் குளித்து வர ஒற்றைத் தலைவலி குணமாகும்.

2.காக்காய் வலிப்பு நிற்க :

வலிப்பு கண்டவுடன் வெள்ளை வெங்காயத்தை துணியில் கட்டி சாறு எடுத்து அந்தச் சாற்றை இரண்டு காதுகளிலும் ஊற்றினால் காக்காய் வலிப்பு உடனே நிற்கும்.

3.வயிற்றுக் கடுப்பு நீங்க :

தொட்டால் சிணுங்கி இலையை பறித்து வந்து நீர் விட்டு அரைத்து சிறு உருண்டையை பசுந்தயிர் கலந்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

4.பித்தம், மூலக்கொதிப்புக்கு மருந்து :

நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் கறி வேப்பிலையைச் சாப்பிட்டு வர மேற்படி இரண்டு நோய்களும் நம்மை அணுகாது.

5.பீச்சி அடிக்கும் பேதி உடனே நிற்க மருந்து :

மாங்கொட்டையில் உள்ள பருப்பை எடுத்து பசும்பாலுடன் கலந்து மைய அரைத்து அந்த விழுதை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் உடனே நிற்கும்.

6.நகச் சொத்தை நீங்க :

படிகாரத்தைப் பொரித்து நீர் விட்டு கெட்டியாக குழைத்து நகச் சொத்தையின் மீது வைத்துக் கட்ட குணமாகும்.

7.வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க :

மணத்தக்காளியை அடிக்கடி சமைத்துச் சாப்பிட வாய்ப்புண், வயிற்றுப்புண் வியாதிகளைப் போக்கலாம்.

8.பசி ஏற்பட :

வேப்பம்பட்டை, கிராம்பு, நிலவேம்பு இம்மூன்றையும் 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து பசி இல்லாத நேரங்களில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர பசி எடுக்கும்.

9.நட்டுவாக்களி விஷம் இறங்க :

நட்டுவாக்களி கொட்டி விட்டால் உடனே ஒரு துண்டு தேங்காயை நன்றாக மென்று தின்ன விஷம் இறங்கும்.

10.தொண்டை வலிக்கு மருந்தது :

சுண்ணாம்பும் விளக்கெண்ணையும் மைய குழைத்துக் காய்ச்சி பொறுக்கும் சூட்டுடன் தொண்டையில் தடவி வர தொண்டை வலி குணமாகும்.

11.படையை நீக்க மருந்து :

வெள்ளைப் பூண்டும் நவச்சாரமும் சம அளாஹவு எடுத்து மைய அரைத்து படையின் மீது தடவ குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here