இரு சக்கர வாகனம்
என்று சொல்ல
கொஞ்சம் கூச்சப்படும்
காலம் இது.
சைக்கிள் அறிமுகமான
பொழுதில் மாட்டுவண்டியும்
இப்படித்தான் கூச்சப்பட்டிருக்கும்.
எத்தனையோ
பரிசுக் குலுக்கலில்
முதல் பரிசுக்கான
இடத்தை பிடித்தது.
தாவணிகளுக்கும்
சைக்கிள்களுக்கும்
நெருக்கமான பந்தம் உண்டு.
எத்தனையோ
மாப்பிள்ளைகளுக்கு
சீதனமாய்
சென்று சேர்ந்துள்ளது.
My dad’s gift க்கு
முதன் முதலில்
பெயர் பெற்றது.
எத்தனை சொகுசு
வாகனங்கள்
நின்றாலும்
விற்கவும் மனமில்லாமல்
பேரீச்சம்பழமும் ஆகாமல்
வீட்டின் ஒரு மூலையில்
நிற்கும் இந்த மிதிவண்டி
நாம் உபயோகித்து மறந்த
வண்டிகளில் மீதியாய்
நிற்கிறது இந்த மிதிவண்டி
-ம. வினு மணிகண்டன்