மருத்துவ மலர்கள்

0
113

மலர்கள் நம் வாழ்வியல் முறையில் இன்றியமையாத இடத்தை பிடித்திருந்தாலும் மலர்களை நாம் வாசனைக்காகவும் அலங்காரத்துக்காகவும் பயன்படுத்தி வருகிறோம். மருத்துவக் குணங்களையும் அவற்றை எளிய மருந்தாகப் பயன்படுத்தும் முறைகளையும் தெரிந்து கொள்வோம்.

குங்குமப்பூ

இதற்கு ஞாழல்பூ என்று வேறு தமிழ் பெயரும் உண்டு. குங்குமப்பூவின் மகரந்த தாள்கள் செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். குங்குமப்பூ வாசனையுடன் மினுமினுப்பாய் இருக்கும் இதனை நீர் விட்டு கலக்கினால் நீர் செம்மஞ்சள் நிறமாகும் கர்ப்பிணிகள் குங்குமப்பூவை வெற்றிலையில் வைத்தோ அல்லது பாலிலிட்டு அருந்தினாலோ சுகப்பிரசவம் ஆகும். குங்குமப்பூவை தாய்ப்பாலில் உரைத்து கண்ணில் மை போலிட்டு வ்ர கண் நோய்கள் தீரும்.

பன்னீர் ரோஜா

நாட்டு வகை பன்னீர் ரோஜா பூக்கள் சிவப்பு இளஞ்சிவப்பு வெண்மை ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. தற்போது இவை கடைகளில் கிடைப்பது அரிதாகிவிட்டன. செடிகளை வாங்கி நம் வீட்டில் வளர்த்தால் எல்லாக் காலங்களிலும் பூக்கும் பன்னீர் ரோஜாவின் இதழ்கள் மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன. பன்னீர் ரோஜாவின் இதழ்களைக் கொண்டு பன்னீர் மணப்பாகு குல்கந்து ஆகியவற்றைத் தயாரிக்கலாம். பூக்களிலிருந்து ஒருவகை நறுமணம் பொருந்திய எண்ணெய் எடுக்கப்படுகிறது இதற்கு அத்தர் என்ரு பெயர். பன்னீர் ரோஜா இதழ்களை நீரில் ஊறவைத்து கண்களைக் கழுவ கண் சிவப்பு கண்ணெரிச்சல் நீங்கும். பன்னீர் ரோஜா இதழ்களை பச்சையாக மென்று தின்ன வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆறும்.

மந்தாரைப் பூ

சிவப்பு வெண்மை என பல வகைகள் உண்டு மந்தாரைப்பூ மொட்டுக்களைக் குடி நீரில் இட்டுப் பருக இருமல் நிற்கும் அதிகப்படியான குருதிப்போக்கு கட்டுப்படும்.

மாதுளம் பூ

மாதுளம் பூவை அரைத்து மோரில் கலந்து குடிக்க குருதி மூலம் போகும் வயிற்றுக்கடுப்பு குறையும்.

தாமரைப் பூ

அரவிந்தம் கமலம் அப்புசம் சூரிய நட்பு போன்ற வேறு பெயர்களும் உண்டு. வெண்தாமரைப் பூவின் இதழ்கள் ஐந்தினை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து பருகி வர இதயம் மற்றும் நரம்புகள் பலப்படும். படபடப்பு நீங்கும் வெப்பமுள்ள மருந்துகள் உண்பதால் ஏற்படும் உடல் கூடு நீங்கும்.

தும்பைப் பூ

தும்பைப் பூவை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்துவர நீர்கோவை தலைபாரம் நீங்கும். விளக்கெண்ணெய் தைலமாக காய்ச்சி கண்களில் மைபோல் தீட்ட கண்கள் ஒளிபெறும்.

முருங்கைப்பூ

முருங்கைப்பூவை பாலில் வேகவைத்து உண்டு வர உடல் வண்மை பெறும். உடல்சூடு தணியும் ஆண்மை பெருகும்.

வாழைப்பூ

வாழைப்பூவை வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிட்டுவர கர்ப்பப்பை பலம் பெறும் வாழைப்பூவை பாசிப்பருப்புடன் சூப் செய்து சாப்பிட குடல் புண்கள் ஆறும். வாழைப்பூச் சாறு மோருடன் சேர்த்து காலை மாலை பருக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here