“மனைவியும் தாயாகிறாள்! கணவனும் சேயாகிறான்!!
வாழ்க்கை தொடங்கி! இளமை அடங்கி!
வளமை அடங்கி! முதுமைதொடங்கி!!
ஆணைவிட, பெண்ணை வயதுகுறைவாக தேடும்சமூகம்!!
ஆக்கம் ஊக்கம் இழக்கும்!
ஆண்மகனை!! தாயாக மாரி காக்கத்தானோ !!இப் பெண்சமூகம்!!
முடியாத முதுமையில்!தன்கணவனை
முழுமூச்சாய்,,!! உழைத்துகொடுத்த குடும்பத்தலைவனை!!
தன் பிள்ளைகளின்! மலம் ,சிறுநீர் ஜலம் கழுவியே!!
தான் உண்ணாதுஊட்டி வளர்த்த!
தன்னலமற்ற தியாகி!!
தன் கணவனை சேயாகநினைத்து!!
சேவைசெய்கிறாளோ தவித்து!!
-கவிதை மாணிக்கம்.