மகிழ்ச்சி என்பது வெளியே இல்லை. நம் உள்ளே உள்ளது. எனவே வெளியே அதை தேடாதே தொலைந்து போவாய்.
அதிக எதிர்ப்பு ஆபத்தானது. எதிர்ப்பை குறைத்து கொள். ஏமாற்றம் குறையும். எந்த வித பிரதி பலனை எதிர்பார்த்து
வேலை செய்யதே. உன் கடமையை நீ செய்து
விடு. வருவது எதுவும் வழியில் நிற்பது
இல்லை. நல்லதோ இல்லை கெட்டதோ.
கடமையை செய். பலனை எதிர்
பார்காதே. உன் எண்ணம் நல்லதாக இருந்தால்
நல்லதே நடக்கும். நம்பிக்கை கொள்.
இந்த உலகத்தை நீ மாற்ற முடியாது. நீ உன்னை
மாற்றிக்கொள்வது சுலபம்.
நீ சந்தோஷமாக வாழ முடிவு
செய். உன் சந்தோசம் உன் உள்ளே. எதற்காகவும்
எதையும் விட்டுக் கொடுக்காதே.
வாழ்க்கை ஒரே முறை இந்த பூமியில் வாழ்ந்து காட்டு. வானம் கூட எல்லை இல்லை .
உன் எதிர்பார்பை குறைந்து
கொள். ஏமாற்றம் தானே குறையும். எதிலும் பற்று அற்று
இரு.
பிறருக்கு உதவி செய் தப்பில்லை. பிறருக்கு உபதேசம் செய்வதை நீயும் கடைபிடி.
உண்மையே பேசு. கஷ்டம் வந்தாலும் ஏற்றக் கொள்.
முயன்றல் முடியாதது
இல்லை. உன்மேல்,
கடவுள் மேல் நம்பிக்கை
கொள். எதுவும் தப்பாக நடக்காது.
நடந்தால் அதை ஏற்றுக்கொள்ள
கூடிய மனப்பான்மையை
வளர்த்துக்கொள்.
எப்போதும் எதற்காகவும் கவலைப்படாதே. கவலைப்படுவதால் எதுவும்
மாறுவதில்லை. தன்னம்பிக்கை வளர்த்து கொள். நல்லது நினைக்க நல்லதை நடக்கும்.