பொங்கல் வரலாறு

0
28

தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை.
தைப்பொங்கல் தை ஒன்று அன்று தமிழர்களால் இனிமையாக கொண்டாடப்படும் விழா தமிழர் திருநாளாக தமிழ்நாடு இலங்கை மலேசியா சிங்கப்பூர் ஐரோப்பியா வட அமெரிக்கா தென் ஆப்பிரிக்கா ஓரிஷியஸ் இது போன்ற தமிழர் வாழும் நாடுகளில் இவ்விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது .பொங்கல் நீர், நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று, போன்ற பஞ்சபூதங்களுக்கும் மரம் செடி கொடி போன்ற இயற்கைக்கும் விலங்குகளுக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்துவதாகும் . இதன் வரலாறு சங்க காலத்தில் நாடு செழிக்கவும் மழை பொழியவும் பெண்கள் இந்த நோம்பை கடைப்பிடித்தார்கள் இந்த நோம்பு மார்கழி பவுர்ணமியில் தொடங்கி தை முதல் நாளில் இந்த நோம்பை முடிப்பார்கள் இதனை தை நீராடல் என சங்க இலக்கியங்கள் கூறுகிறது. நல்ல விளைச்சல் கொடுத்ததற்காக பூமி சூரியன் விளைச்சலுக்கு உதவிய மாடுகள் போன்றவற்றிர்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சக்கரை பொங்கல், வெண்பொங்கல் படைத்தது வழிப்பட்டனர் இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் தினமாக மாறியது .பொங்கல் பண்டிகையை பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்மந்தப்பட்ட விழாவாக இருந்துள்ளது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மையாகும் .இது இந்திர விழா என்ற பெயரில் இலக்கிய காலத்தில் இருந்தே உள்ளது மணிமேகலை கதையில் இந்திர விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது இந்த விழா காவேரிப்பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்பொது பொங்கல் தைப்பொங்கல் மாட்டுப்பொங்கல் காணும்பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது .ஆனால் அந்த காலத்தில் இருபத்தி எட்டு நாட்கள் வரை நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கின்றன .

முதல் முதலாக இந்திர விழா நடத்திய பொழுது அத்தனை நாட்டு மக்களுக்கு முரசுக்கொட்டி பொது அறிவிப்பாக அறிவித்தார்கள் .இப்பொது பொங்கல் வீட்டை சுத்தம் செய்வது போல அன்றும் நடந்துள்ளது தெரு வீதிகளிலும் நகர வீதிகளிலும் பழைய மணலை மாற்றி புது மணலை பரப்பினார்கள் .காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோவில் வரை சிறப்பு பூஜை நடைபெற்றது .இவ்விழாவில் பசி, பகைமை, நோய்கள் நீங்க இறைவனுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது மழை உரிய தெய்வம் இந்திரன் அவரை வழிபட்டால் மழை அதிகம் பெய்து பயிர்கள் செழிக்கும் என நம்பினார்கள் .பிற்காலத்தில் சூரியன் பற்றிய அறிவு மக்களுக்கு வந்தவுடன் சூரியன் சந்தோசத்தை நிர்ணயிப்பவன் என்ற நம்பிக்கை வந்தது தன் கண்முன் காட்சி தரும் சூரிய கடவுளுக்கு பொங்கல் படைத்தது வழிபட்டனர் .பூமியில் இருக்கும் நீரை ஆவியாக்கி மேலே கொன்று சென்று மழை பொழிய வைப்பவர் என்ற நீதியில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தாங்கள் அறுவடை செய்த முதல் நெல்லை முதல் நாளில் சமைத்து இந்திர விழா என்ற பெயரில் கொண்டாடினார்கள் இது பிற்காலத்தில் பொங்கல் என பெயர் மாறியது

உழவர் திருநாள், பொங்கல் விழா மக்களால் இயல்பாக கொண்டாடப்படுகிறது உழைக்கும் மக்கள் தானே கண்டுணர்ந்து தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும் தம்மோடு சேர்ந்து உழைத்த மாட்டுக்கும் தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாதான் இந்த உழவர் திருநாள் உள்ளவர்கள் மழையின் உதவியால் ஆடிமாதம் முதல் உழைத்து சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து தனது உழைப்பின் பயனை நுகரத்துடங்கும் நாளே தைப்பொங்கல். பொங்கல் வைக்கும் முறை தைப்பொங்கலுக்கு சில நடக்குக்கு முன்னரே வாணவெடிகள் வெடித்து தனது மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்திப்படுத்திக்கொள்வார்கள் கொள்வார்கள் தமிழ்நாடுகளில் புது பானைகளை வாங்குவார்கள் பொங்கல் பண்டிகை நான்குநாள் கொடாடப்படும் பண்டிகை ஆகும் மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது அந்நாளில் பழையன கழிந்து புதியென புகுதல் வழக்கம் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது .

தைப்பொங்கல் தை முதல்நாளில் நாளில் கொண்டாடப்படுகிறது மாட்டுப்பொங்கல் உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவணி தினத்தன்று ஆவினத்திற்கு நன்றி தெரிவிக்கும் நாளே இந்நாளாகும் பொங்கலிட்டபிறக எச்சில் தண்ணிர் தெளித்தால் என்ற பழக்கம் மதுரைமாவட்டத்தில் உண்டு பொங்கலோ பொங்கல் மாட்டுப்பொங்கல் பட்டிப்பெருகபால்பானைப்பொங்கல் நோவும் பிணியும் தெரு வோட போக என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பார்கள்

காணும் பொங்கல், மக்கள் இந்நாளில் தங்கள் உற்றார் உறவினரை சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப்பண்டத்தையும் பகிர்ந்து கொள்வார்கள் இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாளில் இடம்பெறும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here