பருத்தி பால்

0
56

சங்ககால சுவையான தமிழர்கள் சமையல்

அகநானூற்றில் 129 ஆவது பாடலில் 6-10 வரிகள் ஆகும்

தாழிமுதற் கதலித்த கோழிலைப் பருத்திப்
பொதிவயிற்று இளங்காய் பேடை ஊட்டிப்
போகில்பிளந் திட்ட பொங்கல் வெண்காழ்
நல்கூர் பெண்டிர் அல்குற் கூட்டும்

கணவனை பிரிந்துள்ள தலைவியிடம் தன் காதல் மிகுதியை உணர்ந்து தலைவன் வருவான் என்று தோழி கூறுகிறாள்
மறுமையில் இருந்தபோதிலும் பருத்திக் கொட்டையை பயன்படுத்தி பருத்திப்பால் செய்தால் என இப்பாடல் கூறுகிறது.

ஆண் பறவைகள் கொத்தி பிளந்து போடப்பட்ட பருத்தி கொட்டையில் இருந்து எப்படி பருத்திப்பால் செய்யலாம் என பார்ப்போம்

தேவையான பொருட்கள்

பருத்திக்கொட்டை 2 கப்

அரிசி 5 டீஸ்பூன்

துருவிய தேங்காய் 1/2 கப்

இஞ்சி சிறிதளவு ஏலக்காய் 2 வெல்லம் தேவையான அளவு

செய்முறை

சுமார் 8-9 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பருத்தியை நன்கு அரைக்கவும் கூடவே தோல் சீவிய இஞ்சி ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் அரைத்தவற்றை பாத்திரத்தில் சேர்த்து பாத்திரத்தில் பச்சை வாடை போகும் வரை கொதிக்கவிடவும் சுமார் இரண்டு மணிநேரம் ஊறிய அரிசியை அழைத்து கொதிக்கும் பருத்தி பால் சேர்க்கவும் அதனுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும் கொதித்து கெட்டியாக வரும்போது பருத்தி பாலில் அரைத்து வைத்துள்ள துருவிய தேங்காய் சேர்க்கவும் அடுப்பை சிறு தீயாக வைக்கவும் நன்கு கலக்கவும் சுவையான பருத்திப்பால் தயார்

குறிப்பு

நார்ச்சத்து புரதச்சத்து நிறைந்த பருத்தி பால் உடலுக்கு நல்லது. நெஞ்சுக்கு உரம் அளிக்கக்கூடிய மருந்தை போன்ற பருத்திப்பால் சங்ககால மக்கள் நன்கு அறிந்து பயன்படுத்தி உள்ளனர். சளிக்கு ஏற்ற மருந்தாகும் பருத்திப்பால்.சளித் தொந்தரவு சர்க்கரைவியாதி உள்ளவர்கள் வெல்லத்தை சேர்க்காமல் பருத்திப்பால் செய்து குடிக்கலாம்.இஞ்சிக்கு பதிலாக சுக்கை சேர்க்கலாம்.

தமிழர்களின் உணவுகளை உண்டு உலகிற்கு பறைசாற்றுவோம் …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here