தேவதையும் ஸ்கூட்டியும்-2

0
27

தேவதையும் ஸ்கூட்டியும்-2

இராஜகுமாரனிடம் அடம்பிடித்து வாங்கிய
புது ஸ்கூட்டியை ஓட்ட தெரியாமல்
கொஞ்ச நாட்களுக்கு
நன்கு ஓட்ட தெரிந்த தோழியை
இருசக்கர வாகன ஓட்டுநராக்கி அழகு பார்ப்பாள்…..

தட்டுத்தடுமாறி வாகனம்
ஓட்ட பழகிய பிறகும்
மிதிவண்டி ஞாபகத்தில்
“டபுள்ஸ் அடிக்க தெரியாதென”
வெள்ளந்தியாய் கற்று தந்த தோழி உட்பட
யாரையும் ஏற்ற தயங்குவாள் …..

முன்னே செல்லும் ஆட்டோவின்
“பின் கண்ணாடியில்”
முகம் பார்த்து, பொட்டு சரிசெய்து
வழி கேட்டு ஹாரன் அடிப்பவர்களை
கண்டுகொள்ளாமல் விடுவாள்…..

வெயில் காலங்களில்
கண்களை தவிர
முழுமுகத்தையும் துப்பட்டாவில் மூடிக்கொண்டு
முகமூடி கொள்ளைக்காரியோ??
பயமுறுத்தியபடி காற்றில் பறப்பாள்…..

ஓட்டும் வரை ஓட்டிவிட்டு
பெட்ரோலில்லாமல் வழியில் நின்றால்
“க்ளையன்ட் காலில்” இருக்கும்
இராஜகுமாரனை நூறு முறைக்கு மேல்
தொடர்ந்து அழைத்து கோபம் கொள்வாள்…..

நன்றாக ஓட்ட பழகியதும்
தன் “சக்கரவர்த்தி” தந்தையை பின்சீட்டில்
அமர்த்திக்கொண்டு
“ஆனந்த யாழை மீட்டியபடி”
நெடுந்துயர பயணமொன்றை
பெரும் புன்னகையுடன் மேற்கொள்வாள்…..

#பிரபுசங்கர்_க

#தேவதையின்_அட்டூழியங்கள்-45

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here