தேனீர்

0
16

பனிப்பூ இதழ்களுக்கு
ஒரு
கோப்பைத் தேனீரால்
இளஞ் சூட்டில்
ஒத்தடம் கொடுக்கிறேன்

ஒரு சொட்டு
உரசும் நேரம்
காலைச் சூரியன்
தங்க நிலவாகத் தகதகக்கிறது

வாழையிலையில்
வடியாமல் தேங்கிய
பனித்துளி
வடிக்கச் சொல்கிறது
ஒரு கவிதை

கார்மேகம்
எனைப் பார்த்துக் கொண்டே
கடந்து போகிறது

வெறுமை தந்த தனிமையை
வெளியே போ! என்கிறது

பார்ப்பவர்களை அழைத்துப்
பந்தி வைக்கச்
சொல்கிறது

தேனீர் முடிவதற்குள்
மனம்
முழு நீளக் கவியொன்றை
எழுதி விடுகிறது

ஆம்
ஒரு கோப்பைத் தேனீர் தான்
காட்சிகளை
அழகாக்கியது
என்னைக் கவிஞனாக்கியது

பார்த்தவுடன் பரவசமடைய
மூளை பதிவு
செய்தது எப்போதெனத்
தெரியவில்லை.

-சிவபுரி சு.சுசிலா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here