தேங்காய் கேசரி

0
86

இதில் ஒரு advantage என்னவென்றால் நெய் மிக மிகக் குறைவாக தேவைப்படும் இதற்கு. மேலே சொன்ன அதே செய்முறை மற்றும் அளவுதான். தேங்காயே இனிப்பு என்பதால் சர்க்கரை மட்டும் ஒண்ணேகால் கப் போதும்.

ஒரு முழு தேங்காய் எடுத்து துருவி பால் எடுக்கவும் அல்லது ரெடிமேட் தேங்காய் பால் ஒரு கப் எடுக்கலாம்.

ஒரு டேபிள்ஸ்பூன் கசகசாவை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் அதிலுள்ள கல் மண் குப்பைகள் அடியில் தங்கிவிடும். மேலாக உள்ளதை ஒரு டீ வடிகட்டியில் வடிகட்டி அதை வறட்டு வாணலியில் போட அது காய்ந்ததும் பட படவென்று pop ஆகும். அதை எடுத்து வைக்கவும். இது வேண்டாம் என்றால் முந்திரி பருப்பை வறுத்து போடலாம்.

மேலே சொன்ன முறையிலேயே தண்ணீர் பக்கத்தில் கொதிக்கட்டும், வெறும் தேங்காய்ப்பாலில் வேகுவதைக் காட்டிலும், தண்ணீர் பாதி எடுத்தால் சரியான முறையில் வேகும்.

கசகசா வேண்டாம் என்றால் முதலில் ரெண்டு ஸ்பூன் நெய்யில் முந்திரி பருப்புகளை வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் ரவையை வறுக்கவும். வறுபட்டதும், கொதிநீர் கொஞ்சமாகவும் மீதி தேங்காய் பாலும் சேர்த்து வேகவிடவும். அடுப்பு மட்டும் சிம்மில் இருக்கட்டும். ரவை அடிப்பிடிக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

இது கேசரி கலர் இல்லாமல் வெளுப்பாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். ஒரு பின்ச் சோடா உப்பு சேர்த்தால் பால் போல நிறம் கிடைக்கும்.

ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து ஏலத்தூளையும் சேர்த்து மூடி வைக்கவும்.

ரெண்டு நிமிடத்தில் திறந்து மேலே இன்னும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு வறுத்த முந்திரிகளை சேர்த்து அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.

ஐந்து நிமிடம் பொறுத்து ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி மேலே சமமாக பரத்திவிட்டால் ஆறியதும் துண்டுகள் போட்டு வைக்கலாம்.

அல்லது வறுத்த கசகசாவை மேலே தூவி துண்டு போடவேண்டும்.

குறைவான நெய்யில் செய்துவிடக்கூடிய கேசரி இது.

தேங்காய் பாலா? எனக்கு வாசனையே பிடிக்காதே என்பவர்கள் வெறும் பாலில் செய்யக்கூடிய பால் கேசரியை ட்ரை பண்ணுங்களேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here