திருக்குறள் கதை

0
319

குறள்:

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

குறள் விளக்கம்:

ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.

குறளுக்கான கதை :

ஒரு காட்டிற்கு ராம், பிரபு என்று இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது பிரபு அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார். ராம்-க்கு பயங்கர ஆச்சர்யம்.

நம்மை போல தானே அவனும். அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் ராம், பிரபுவிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! ராம் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று. சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் பிரபு, ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே, ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி என்றுபிரபு விடம் கேட்டான்!..

நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் பிரபு.

மறுநாள் ராம் அதே போல் ஓய்வு எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் ராமால் பிரபு அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை.

மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பிய ராம், மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், ராம் பிரபுவை பின் தொடர்ந்து சென்றான். பிரபு அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்த போது, அவனது கோடாரியை தீட்டி கொண்டிருந்தான். பிறகு தான் ராம்-க்கு தெரியவந்தது. மரவெட்டி தீட்டி கொண்டு வெட்டுவதால் தான் அதிக மரம் வெட்டமுடிகிறது என்று தெரிந்து கொண்டார் ராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here