தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிதாக 3,943 பேருக்கு தொற்று; 90 ஆயிரத்தை தாண்டியது 60 பேர் பலி..!

0
41

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டியது. புதிதாக 3,943 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 60 பேர் நேற்று உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

90,167 பேர் பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 30 ஆயிரத்து 53 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 943 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 11 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 76 பேரும் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட 212 குழந்தைகளும், 60 வயதுக்கு உட்பட்ட 492 முதியவர்களும் அடங்குவர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 42 பேர் பலி

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 44 பேர், தனியார் மருத்துவமனையில் 16 பேர் என 60 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் சென்னையில் 42 பேர், செங்கல்பட்டில் 5 பேர், திருவள்ளூர், மதுரையில் தலா 3 பேர், ராமநாதபுரத்தில் 2 பேர், காஞ்சீபுரம், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கரூரை சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா சாவு எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு பலனாக நேற்று 2 ஆயிரத்து 325 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 50 ஆயிரத்து 74 பேர் குணமடைந்து உள்ளனர். 38 ஆயிரத்து 889 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

மாவட்டங்களில் பாதிப்பு

தமிழத்தில் நேற்று 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதன்படி இந்த பட்டியலில் சென்னையில் 2 ஆயிரத்து 393 பேரும், தூத்துக்குடியில் தலா 40 பேரும், திண்டுக்கலில் 37 பேரும், ராமநாதபுரத்தில் 36 பேரும், சேலத்தில் 25 பேரும், ராணிப்பேட்டையில் 24 பேரும், தஞ்சாவூரில் 23 பேரும், திருப்பத்தூரில் 22 பேரும், திருப்பூர், கன்னியாகுமரியில் தலா 20 பேரும், ஈரோட்டில் 19 பேரும், திருவண்ணாமலையில் 16 பேரும், திருவாரூரில் 12 பேரும், தர்மபுரி, தென்காசியில் தலா 11 பேரும், கோவையில் 9 பேரும், நீலகிரியில் 7 பேரும், கிருஷ்ணகிரியில் 6 பேரும், நாமக்கலில் 3 பேரும், நாகப்பட்டினத்தில் இருவரும், கரூரில் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

பரிசோதனை விவரம்

தமிழகத்தில் இதுவரை சென்னையில் 888 பேரும், செங்கல்பட்டில் 92 பேரும், திருவள்ளூரில் 69 பேரும், மதுரையில் 32 பேரும், காஞ்சீபுரத்தில் 21 பேரும், விழுப்புரத்தில் 15 பேரும், திருவண்ணாமலையில் 11 பேரும், ராமநாதபுரத்தில் 10 பேரும், நெல்லையில் 7 பேரும், விருதுநகர், திண்டுக்கலில் தலா 6 பேரும், கடலூரில் 5 பேரும், ஈரோடு, தூத்துக்குடி, திருச்சி, வேலூரில் தலா 4 பேரும், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலத்தில் தலா 3 பேரும், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, தேனியில் தலா இருவரும், கோவை, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் விமான கண்காணிப்பு முகாமில் ஒருவரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 11 லட்சத்து 70 ஆயிரத்து 683 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 10 லட்சத்து 80 ஆயிரத்து 516 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here