தந்தையின் சிம்மாசனம்…!

0
191

தாயின் வயிற்றில்
உலாவந்தேன்!!
தந்தையின்தோலில்
மேலே உயர்ந்து வந்தேன்!!

நான் நடக்கையில்
என்பாதம்,தேயுமென்று!!
நான் பயணிக்க!
பாதசெருப்பாய்
ஆனதே! நன்று,!

வேகவைக்கும்,
வேகம் கூடிய
வெய்லிலும்!!
வேண்டுதலில்
நடக்கும் சாமி
போலும்!!

செருப்பே !
அணியாது,
செருக்காய்!
நடக்கும்,
நடைகண்டு
செந்நிறச்சூரியனும்,
செந்தணல்
குறைத்திடும்!!

செல்லமாய்
நான் பவணி வரும்!!
செந்தேரைமிஞ்சும்!
செல்வச்சீமான்
பிள்ளைகளுக்கும்!
செல்லக்கிடைக்காத‌!
சிம்மாசனத்தை மிஞ்சும்!!

தேசத்தில் தேடியும்
கிடைக்காத!
தந்தையின்
தேகபுஜத்தின்தோல்,
சிம்மாசனம்!

  -முத்துமாணிக்கம்,சங்குப்பட்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here