ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

0
50

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே 8-ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர். 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் தற்போது முடிவடைந்தது.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை ரிப்பன் வெட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

ஜெயலலிதா நினைவிடம் தொடர்பான கல்வெட்டையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டதையடுத்து அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here