ஜூலை மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்த செய்தித்துளிகள் ..!

0
58

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அரசு மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, அவர்களை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சுகாதார துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.

வேலூர் மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,496  ஆக அதிகரித்துள்ளது. மேலும் 35 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் சிவாடியில் இருந்து திருச்சி சென்ற லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.  தொப்பூரில் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  விபத்தில் லாரி ஓட்டுநர் செல்வம், உதவியாளர் தங்கராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த சின்னவன், அரியாகவுண்டர் ஆகியோர் பலியாகியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,809 ஆக அதிகரித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது.

புதுக்கோட்டை மோசம்பட்டியில் நேற்று இருதரப்புக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.  இந்த மோதல் தொடர்பாக 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து அறந்தாங்கி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இருதரப்பு மோதலை தவிர்க்க நேற்று போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மாணவனை இழிவாக பேசி மலம் அள்ள வைத்த விவகாரத்தில் ராஜசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்சி , எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பென்னாகரம் போலீசார் ராஜசேகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே மையத்தில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  எக்ஸ்ரே மையத்தில் இருந்த கணினி மற்றும் எக்ஸ்ரே கருவிகள் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மேலும் 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,079 ஆக அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
உடலை கைப்பற்றி சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் தீவிர விசாரணை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here