சகலகலாவல்லி சரஸ்வதி தேவி

0
73

சகலகலாவல்லி சரஸ்வதி தேவி

*ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை- தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் வாராதிங்கு இடர்.”

– கவிச்சக்கரவர்த்தி கம்பர்

*அறியும் திறனுக்கு அரணாய் இருந்து, அருள்பாலித்து, ஈடு இணையற்ற கல்விச் செல்வத்தை அளித்து, காக்கும் சக்தியாய் உலவும் அன்னை சரஸ்வதி தேவி மென்மையின் இருப்பிடம்.

*மென்மை உள்ள இடத்தில்தான் அறிதல் இருக்கும். வன்மை உள்ள இடத்தில் மட்டுமே நிலைக்கும். ஆணவம்கொண்டோருக்கு அன்னையின் அருள் கிட்டுவதில்லை.

*அன்னை சரஸ்வதி கல்விக்கும் ஆயகலைகள் 64 க்கும் அதிபதி. சமயோசிதம், புத்திக்கூர்மை, நாவன்மை ஆகியவைகளுக்கும் அதிபதி கலைவாணியே.

*பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிக்கும் சகலகலா வல்லியினது திருவடிகளை வெள்ளை நிறத் தாமரையே தாங்கியுள்ளது!

* வஞ்சனையற்ற குளிர்ந்த எளியோர்களின் வெண்தாமரை போன்ற மனதினை திருவடிகளை தாங்கும் ஆசனம் ஆக்கிக்கொள்ள ஏங்கி துதிக்கிறோம்.!

*மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்வது போன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் அன்னம் சகலகலாவல்லி –

* அன்னம் நீரையும் பாலையும் பிரித்தறிந்து கொள்வதைப்போன்று பேரின்பத்தை தருவனவற்றை உலகியல் இன்பங்களில் இருந்து பிரித்தறிந்து கொள்ளும் ஆற்றலை தனது அடியாருக்கு வழங்கி அருள்பாலிக்கும் வெண்மையான பெண் அன்னம் -கலைமகள்

* படைக்கும் தெய்வம் நான்முகன் முதலாக சிறப்புடைய தெய்வங்கள் பலகோடி இருந்தாலும் கலைமகளைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை என்று தெளிந்து கூறும்படியாக விளங்குபவள் சகலகலாவல்லியே!

மேலும் இந்த மாதிரி ஆன்மீகத்தகவல்கள் தெரிந்துகொள்ள நம்ம மகிழ்ச்சி Fm  ல் தினமும் காலையில 5 மணி முதல் காலை 7 மணி வரை “ஆன்மீகச் சோலை’ நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here