குஞ்சுப் பறவை

0
25

என்
குஞ்சுப் பறவை
பறக்க எத்தனிக்கும் போதே நானும்
பறவை சாதி என்பது
நினைவுக்கு வருகிறது.

சிறகைத் தேடி எடுத்து
மெல்லப்
பறந்திட எழுகிறேன்.

வளரும் நாட்களில்
தினமொரு செட்டையிறகை
பிய்த்தெறிந்தது
மனதிற்குப் புரிகிறது

சிறகுகள் முளைத்த இடத்தில்
ஆறாத ரணமாக
இன்னமும் காயங்கள்

அதற்கான வருத்தமின்றிப்
பெருமிதம் என்பதும்
சமூகக் கேடுகளின்
தவிர்த்தல் விலங்கென்றே
விளக்கம் அளித்திடுவர்.

இப்போது
எனக்கிருக்கும் சந்தேகமெல்லாம்
என் குஞ்சுப் பறவையின்
சிறகை என்ன செய்வது
என்பது மட்டுமே.

-சிவபுரி.சு.சுசிலா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here