நீ வந்து போன
தடங்களை
வாஞ்சையோடு
ரசித்திருந்தேன்..
நீ நின்று சென்ற
இடங்களை
நீங்காமல்
கண்டிருந்தேன்..
ஓராயிரம்
முறையேனும்
ஓடி வந்து
பார்த்திருப்பேன்..
ஒரு சிறிய
செய்திக்காய்
ஓயாமல்
காத்திருந்தேன்…
உன்னிடம்
சொல்லி விட
ஒரு வார்த்தையும்
உதவவில்லை..
சொல்லாத
என் மொழியும்
உனைச் சேரும்
அதில் ஐயமில்லை..!
-அன்புடன் ஆனந்தி.