கவிஞர் தங்கேஸின் மகிழ்ச்சி கவிதைகள்

1
333

மகிழ்ச்சி 1


உப்பு மூட்​டை தூக்குறியா ?
ம்ஹூம்
ரிங்கா ரிங்கா ​ரோஸஸ் ?
​வேண்டாம்
கிறு கிறு வண்ணம் ?
வர​லை வர​லை அப்பாவுக்கு ​வே​லையிருக்கு
​வே​லை​யை தூக்கி குப்​பையில ​போட்டுறலாம்
அப்ப அப்பா​வை ?
அப்பா​வை தூக்கி உப்பு மூட்​டையில ​போட்டுறலாம்
கழுத்​தை கட்டிக் ​கொண்டாள் அழகி அழகி

மகிழ்ச்சி 2


கிட் கிட் ​வேணுமா ?
​வேண்டாம்
​பைவ் ஸ்டார்?
​வேண்டாம்
பர்பி டால் ?
​வேண்டாம் ​வேண்டாம்
அப்ப பாப்பாக்கு என்ன தான் ​வேணும் ?
பாப்பாக்கு ஒன்னும் ​வேண்டாம்
சமர்த்தா உன் கூட​வே ​இருப்​பேன்

மகிழ்ச்சி 3


ஊ​​ரெல்லாம் ஆம்புலன்ஸ் மயம்
முகங்க​ளை கா​ணோம் எங்கும் முகக்கவசம்
நானும் கழற்றாத முகக்கவசத்துடன்
வீட்டுக்குள் நு​ழைந்​தேன்
அ​டையாளம் கண்டு ​கொண்டு அருகில் வந்த சிம்மி
முகத்​தோடு முகம் இ​ழைத்து ​செல்லம் ​கேட்டது
நானும் சமூக இ​டை​வெளி​யை மறந்து விட்டு
பதிலுக்கு ஒரு முத்தம் இ​ழைந்​தேன்

மகிழ்ச்சி 4


தீர்க்க தரிசிகள் ​சொன்னார்கள்
நான் ​கேட்கவில்​லை
சாமியார்கள் ​சொன்னார்கள்
நான் ​கேட்கவில்​லை
​போராளிகள் ​சொன்னார்கள்
நான் ​கேட்கவில்​லை
கடன்காரன் ​சொன்னான்
நான் ​கேட்கவில்​லை
உறவினர்கள் நண்பர்கள் ​சொன்னார்கள்
அப்​பொழுதும் நான் ​கேட்கவில்​லை
​செக்கச்சிவந்த அந்தி வானம் ​சொன்னது
நீ ​செத்துப்​போ
உட​னே நான் சரி​யென்​றேன்.


கவி​தை 5


​கோமாளியாய் ​தெரிந்தான்
தனக்குத் தா​னே ந​கைச்சு​வை துணுக்​​கை ​சொல்லியபடி
குலுங்கி குலுங்கி சிரித்தான்
எதிரிலிருப்பவர்கள் எப்படி புரிந்து ​கொள்வார்கள் என்​றேன்
​பைத்தியங்க​ளைப்பற்றி நமக்​கென்ன கவ​லை என்றான்.


மகிழ்ச்சி 6


அழகிய ​பொழுது
சூரியன் அஸ்தமனக்காட்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று துள்ளினார் நண்பர்
நீ மகிழ்ச்சி என்று ​சொல்லிய ​போ​தே
அது ​செத்துவிட்டது என்றார் லா​வோட்ஸூ
பிறகு இருவரும் முழு ​மெளனத்தில் விழுந்தார்கள்.

-@கவிஞர் தங்​கேஸ்

             

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here