கருப்பை பற்றி முழுமையான தகவல்

0
68

கருப்பை பற்றி முழுமையான தகவல்

கருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார்மோன்களைத் தருகிறது.

கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? கருப்பையை எப்படி பாதுகாப்பது.

பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினைமுட்டைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும்.

அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும். அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும் சினைப்பையும் கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.

பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது.

மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோ ஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும்.

பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51. மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.

உடல்சூடு இரவில் அதிகம் வியர்த்தல் தூக்கமின்மை அடிக்கடி கோபம் சலிப்பு மறதி மனஉளைச்சல் உடல் வலி போன்ற பிரச்னைகள் தாக்கும்.

சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும். உடலுறவில் பிரச்னை ஏற்படும். எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடைதல் உள்ளிட்ட தொந்தரவுகளும் வரும்.

பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுக்கும் போது இது போன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

தவிர்க்க முடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும்போது சினை முட்டைப் பையை விட்டு விட்டால் இப்பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.

ஆனால் கருப்பை எடுத்த சில ஆண்டுகளிலேயே சினை முட்டைப் பையும் இயங்காது. இந்த மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி சிகிச்சை உண்டு. ஆனால் அது கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல் மார்பக புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே கருப்பையை எடுப்பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது.

#பாதுகாப்பு_முறை:

அதிகமாக உதிரம் போதல் வலி சிறிய கட்டிகள் வெள்ளைப்படுதல் ஆகியவற்றை காரணம் காட்டி கருப்பையை அகற்ற வேண்டாம்.

இது போன்ற பிரச்னைகளுக்கு மாற்று வழிகளை கடைபிடிக்கலாம்.

கட்டி மிகவும் பெரிதாக இருத்தல் வளர்ந்து கொண்டே போதல் கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பு இருத்தல் மாதவிடாய் உதிரம் மருந்துக்குக் கட்டுப்படாமல் போதல் போன்ற வழியில்லாத காரணத்தால் மட்டுமே கருப்பையை அகற்றலாம்.

பிறகு கட்டி வரலாம் என்ற கற்பனையில் கருப்பையை அகற்றக் கூடாது.
நவீன மருத்துவத்தில் சினைப்பை மற்றும் கருப்பையை அகற்றாமலேயே கட்டியை அகற்ற லேப்ராஸ்கோபி முறையில் பல சிகிச்சைகள் உள்ளன.

மெனோபாஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பவியல் நிபுணர்களை அணுகும் போது சரியான மருத்துவம் கிடைக்கும்.

கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் அதில் சில பிரச்னைகளும் இருக்கும். கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

டயட்
அடிக்கடி அபார்ஷன் அதிக டெலிவரி மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு சிறுநீரகத் தொற்று சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு உடல் பருமன் தைராய்டு போன்ற உடல் நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு கருப்பை பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

பரம்பரை காரணங்களாலும் பெண்களுக்கு வரலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதித்து கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது அவசியம்.

அதே போல் உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரித்தல் தினமும் வாக்கிங் சத்தான உணவு என்று வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் தான் கருப்பையை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ள வேண்டும். இரும்புச் சத்து உணவுகள் அவசியம். உப்பை கண்டிப்பாக குறைக்கவும்.

குளிர்பானங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இனிப்பு வகைகள் ஐஸ் கிரீம் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும்.
அரிசி உணவுகளையும் குறைக்க வேண்டும்.

உணவில் ஒரு கப் சாதத்துடன் இரண்டு கப் காய்கறி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
கட்டாயம் ஒரு கீரை இருக்கட்டும். முளைக்கீரை மற்றும் வெந்தயக் கீரை ஆகியவற்றை வாரம் இரண்டு முறையாவது சேர்க்க வேண்டும்.

கருப்பையை எடுத்தவர்கள் ஒரு நாளைக்கு 1200 கலோரி அளவுக்கான உணவு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் கருப்பை எடுத்த உடன் பெண்களின் எடை அதிகரிக்கும்.

மேலும் சாதத்துக்கு பதிலாக பழங்கள் கீரைகள் அதிகம் சாப்பிடுவது அவசியம். இத்துடன் பிறப்புறுப்பு கருப்பை வாய்ப்பகுதியில் நோய்த் தொற்று ஏற்படாதவாறு சுத்தத்தை கடை பிடிக்க வேண்டியதும் அவசியம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

#பாட்டி_வைத்தியம்

வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் தீரும்.

வெந்தயக் கீரையுடன் பூண்டு உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

மாதவிலக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படாதவர்கள் வெங்காயத் தாள் காயவைத்த கறுப்பு எள் கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும்.

மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு மூன்று நாட்கள் சாப்பிட்டால் மாதவிலக்கு ஏற்படும்.

விளா மரத்தின் பிசினை மஞ்சள் சேர்த்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குண மாகும்.

வல்லாரைக் கீரை சாற்றில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு நிற்கும்.

முள் இலவம்பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து தினமும் காலை மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.

முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கருப்பை பலப்படும்.

*********************

#இயற்கையாக……
#இலகுவாக…… #கருதரிக்கலாம்……!!!

#குழந்தையின்மைக்கு
#பல_வைத்தியங்கள் #செய்தும் #குழந்தையில்லா
#தம்பதிகள்.

#நம்பிக்கையிலக்க
#வேண்டாம்.

#இயற்க்கை மருத்துவத்தில்
முழுமையான தீர்வு…………

★#பெண்களுக்கு கருப்பத்தை
தடுக்கும்_அல்லது கருப்பம்_தங்காமல் போவதற்க்கும்_24
காரணங்கள். !!!?

1, கருக்குழாய்அடைப்பு
( Fallopian Tube Block)

2, கருப்பைக் இழை
நார் தசை கட்டி
( FIBROID Uterus )

3, கருப்பைக் கட்டி & சினைக் குழாய் கட்டி.
( Ovarian Cyst )

4, கருப்பை வளர்ச்சியின்மை.

5,பருத்த (தடிம்மம்மான அல்லது பெரிய ) கருப்பை

6,குறுக்கீடான மாதவிடாய் போக்கு

7,மிகை [அதிகமாக] மாதவிடாய்ப் போக்கு.

8,சூதக சூலை.

9,கருப்பை வாயு.

10, கருப்பையில் தங்கி
இருக்கும் கிருமிகள்,
பூச்சீகள் ஒரு காரணம்.

11, சினைபை
நீர்கட்டிகள்.(PCOD)

12, சினை குழாய் அடைப்பு.

13, மாதவிடாய் தாமதமாக வருவது.
(2 மாதம் மற்றும் 3மாததுக்கு ஒரு தடவை மாதவிடாய் விட்டு விட்டு வருவது)

14, மாதவிடாய் சுழர்ச்சி சரியில்லாமை.

15, மலட்டு ரோகம்
3 – வகை
1, காக மலடு
2, கதலி மலடு
3, கன்ம மலடு

16, இரத்த சோகை

17, அடிக்கடி கருச்சிதைவு.

18, அதிகமாக வெள்ளைபடுதல்.

19, ஹேர்மோன் குறைபாடு.

20, தைராய்டு குறைபாடுகள்.

21,சினை முட்டை சரியான வளர்ச்சியின்மை.

22, சினை முட்டை வெடிப்பதில் குறைபாடு.

23, பெண்ருப்பில் அக்கி மற்றும் அரிப்பு,சொரி
போற்ற தோல் நோய்கள்.

24, சில பெண்களுக்கு
30 வயது முதல் 40 வயதுகுள் மாதவிடாய் நின்று போவது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here