கணவனின் வரவை நோக்கி…

0
29

என் உடலோ என்னோடு!!
என்உயிரோ‌
உன்னோடு!!
என்விழிஎன்றது பெயருக்கு !!அது
உன்னை காணாது
அது எதற்கு!
தொட்டுப்பழகிய பிரியங்கள்!!
தொடாதிருக்க பருத்திக்காய்‌ பருவங்கள்!!
வெடித்தும்,பஞ்சாகி
காற்றில் நூலாகு முன்னே!!
வெகுவிரைவில் வருவாயா!!என் கண்முன்னே!!
கண்ணம் என்றகாகிதத்தில்!
உன் எண்ணமென்ற எழுத்தாணி
இதழ் கொண்டு!!
வண்ணமாய் நீ !
தீட்டிய முத்தங்கள்!!
எண்ணமெல்லாம் இடைவிடாது
இனிக்கிறதே!!!
-கவிதை மாணிக்கம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here