ஓம் நமசிவாய …

0
47

சிவ சிவ என்றிடச் சிந்தை தெளியுமோ?
மங்கல நாதம் செவியில் ஒலிக்குமோ?
தவப்பயன் எனக்குத் தயவின்றிக் கிடைக்குமோ?
மங்காத புகழாக மடியிற் கிடக்குமோ?
இவ்விரவு துய்ப்பயன் இன்னும் நீளுமோ?
திங்களாய் ஞாயிறும் குளிர்ந்தே உதிக்குமோ?
கவ்விய மையிருளைக் கதிரொளி கலைக்குமோ?
செங்கமலம் அவிழ்ந்து சிவனே யெனச் சிரிக்குமோ?
சிவப்பணுக்கள் எல்லாம் சிவமாய் மாறுமோ?
சங்கென மாறியே வெவ்வணு ஊதுமோ?
ஔவை போலொரு பக்தியில் உருவமற்று
மங்கைப் பருவம் துறந்து களிப்பேனோ?
பாவால் உன் செவி நிறைப்பேனோ?
பங்கம் வருமெனப் பாதம் ஊன்றாமல்
செவியில் உன்னால்”” அம்மையே””எனக்கேட்ட
அங்கமில்லாத் தாயென ஆகேனோ சிவமே

  -சிவபுரி சு .சுசிலா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here